Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

அன்றாடப் பாவங்களை சரிசெய்தல்

ஆயர் பால் சி. ஜோங்


【4-1】< யோவான் 13:1-17> நற்செய்தியாகிய அதிக அளவிலான பாவப்பரிகாரம்


< யோவான் 13:1-17 >

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்ததும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக் கொண்டிருக்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிகொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது அவன் அவரை நோக்கி; ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவபடாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூடக் கழுவ வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே,நான் அவர் தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவன் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

பஸ்கா பண்டிகைக்கு முதல் நாள் இயேசு ஏன் பேதுருவின் கால்களைக் கழுவினார்? அவன் கால்களைக் கழுவும்போது இயேசு கூறினார். நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்.இயேசுவின் சீடர்களில் சீமோன் பேதுருவே சிறந்தவன். அவன் இயேசுவே தேவகுமாரன் என்று விசுவாசித்ததுடன் இயேசுவே கிறிஸ்து என்றும் சாட்சி பகன்றான். இயேசு அவன் காலை கழுவுவதற்கான நல்ல காரணங்கள் இருந்திருக்கவேண்டும். பேதுரு தன் விசுவாசத்தை இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கைச் செய்தபோது அவனின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவனை இரட்சிக்கப்போகும் இயேசுவே அவன் இரட்சகர் என்று அவன் விசுவாசித்ததாகப் பொருள்படுகிறது.

  • இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் அவர் ஏன் தன் சீடர்களின் கால்களைக் கழுவினார்?
    • குறைவற்ற இரட்சிப்பை தம் சீடர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார்.

அவர் ஏன் பேதுருவின் கால்களைக் கழுவினார்? இயேசுவிற்கு பேதுரு சீக்கிரமாகவே தன்னை மூன்று முறை மறுதலிப்பான் என்றும் வருங்காலத்தில் அவன் அநேகப் பாவங்களைச் செய்வான் என்றும் தெரியும்.

இயேசு பரலோகம் சென்றபின், பேதுருவின் இருதயத்தில் பாவமிருந்தால் அவனால் இயேசுவுடன் ஐக்கியமாகியிருக்க முடியாது. ஆனால் இயேசுவிற்கு அவருடைய சீடர்களின் பலவீனங்கள் தெரியும். அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையில் அவர்களுடைய பாவங்கள் வருவதை அவர் விரும்பவில்லை. ஆகவே அவர்களுடைய எல்லாப் பாவங்களும் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டன என்று அவர் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. சீடர்களின் கால்களை அவர் கழுவியதன் நோக்கம் அதுவே. இயேசு தாம் இறந்து அவர்களை விட்டு போவதற்கு முன், அவர்கள் ஞானஸ்நான நற்செய்தியையும், அவர்களின் வாழ்வு முழுவதும் செய்யும் பாவங்களுக்கான முழுவிடுதலையையும் குறித்து, நன்கு புரிந்து கொண்டனர் என்று நிச்சயித்துக் கொண்டார்.

யோவான் 13 இயேசு தமது சீடர்களுக்கு நிறைவேற்றிய முழு இரட்சிப்பைக் குறித்து கூறுகிறது. அவர்களுடைய கால்களைக் கழுவும் போது, மனிதர்களின் எல்லா அத்துமீறல்களையும் கழுவப் போடச் செய்யும் அவரின் ஞானஸ்நான நற்செய்தியின் அறிவை அவர்களுக்குப் போதித்தார்.

வருங்காலத்தில் சாத்தானால் வஞ்சிக்கப் படவேண்டாம். யோர்தான் நதியில் என் ஞானஸ்நானம் மூலம் உங்கள் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டேன். மேலும் அதற்காக சிலுவையில் நியாயத்தீர்ப்பைப் பெறுவேன். அதன்பிறகு நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து மறுபடியும் பிறக்கும் இரட்சிப்பை உங்களுக்காக நிறைவேற்றுவேன். நான் உங்களின் எதிர்காலப் பாவங்களையும் எடுத்துப் போட்டேன், என்று உங்களுக்கு கற்றுக்கொடுக்கவும், பாவத்திற்கு கிரயம் செலுத்துவதான மூல நற்செய்தியை உங்களுக்கு கற்றுக் கொடுக்கவும், சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உங்கள் கால்களைக் கழுவுகிறேன். இதுவே மறுபடியும் பிறப்பதற்கான நற்செய்தியின் இரகசியம். நீங்களெல்லாரும் இப்படி விசுவாசிக்க வேண்டும்.

நாமெல்லாம் இயேசு ஏன் சீடர்களின் கால்களைக் கழுவினார் என்று புரிந்துகொண்டு, அவர் ஏன் நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்எனக் கூறினார் என்று அறிந்து கொள்ளவேண்டும். அப்பொழுது மட்டுமே நற்செய்தியாகிய மறுபடியும் பிறப்பதை நாம் விசுவாசித்து அதன் மூலம் நாம் மறுபடியும் பிறக்க முடியும்.

யோவான் 13:12 இல் அவர் கூறினார்

  • அத்துமீறல்கள் என்பவை என்ன?
  • நாம் பலவீனர்களாக இருப்பதினால், அன்றாடம் செய்யும் பாவங்கள்.

இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பாக அவர் பஸ்கா பண்டிகையின் பந்தியை சீடர்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுடைய கால்களைத் தம் கைகளினால் கழுவியதன் மூலம் அவர்களுடைய பாவங்களுக்கான கிரயஞ் செலுத்ததலான நற்செய்தியைக் குறித்து போதித்து அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.

தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றி வைத்து ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

அவர் தம் சீடர்களுக்கு ஞானஸ்நான நற்செய்தியைக் குறித்து போதித்ததுடன் இயேசு ஏன் அவன் கால்களைக் கழுவுகிறார் என்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு அவனிடம் பேசிய பிறகு, அவன் இயேசுவை விசுவாசித்த விதம் மாறியது. இயேசு அவனுக்கு பாவப்பரிகாரத்தைக் குறித்தும், நற்செய்தியாகிய ஞானஸ்நான நீரைக் குறித்தும் அவனுக்கு போதிக்க விரும்பினார்.

பேதுருவின் மாமிச பாவங்களாலும், அவன் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவங்களாலும் பேதுருவால் அவனிடத்தில் வரமுடியாதோ என்று அவர் கவலைப்பட்டார். இயேசு அவர்கள் கால்களைக் கழுவியதன் மூலம் சாத்தானால் அவர் சீடர்களின் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு போக முடியாது. பின்னால் பேதுரு ஏன் என்று புரிந்துகொண்டான்.

யாரெல்லாம் அவரின் ஞானஸ்நான நீரையும் இரத்தத்தையும் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலையாகும் படி இயேசு பாதையை அமைத்தார்.

யோவான் 13இல், அவர் தம் சீடர்களின் கால்களைக் கழுவும்போது, பேசிய வார்த்தைகள் பதியப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான வார்த்தைகள் அவற்றை மறுபடியும் பிறந்தவர்களாலேயே உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.

பஸ்கா பண்டிகையின் பந்திக்கு பிறகு இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவியதற்கான காரணம், அவர் அவர்களின் வாழ்நாளின் எல்லாப் பாவங்களையும் கழுவிட்டார் என்று அவர்கள் புரிந்து கொள்ள உதவவே. நான் செய்கிறது என்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்என்று கூறினார். பேதுருவுக்கான இவ்வார்த்தைகளில் மறுபடியும் பிறப்பதன் உண்மை அடங்கியிருக்கிறது.

நம்முடைய எல்லா மீறுதல்களையும் கழுவிப்போட்ட இயேசுவின் ஞானஸ்நானத்தை நாமனைவரும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். யோர்தானில் இயேசு பெற்ற ஞானஸ்நானமானது கைவைப்பதன் மூலம் பாவங்களை இடம் மாற்றும் நற்செய்தியாகும். நாமனைவரும் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும். அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் தம் ஞானஸ்நானத்தின் மூலம் சுமந்து, சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் பாவக்கிரயம் செலுத்தியதை வெற்றி கொண்டார். இயேசு மக்கள் அவர்களின் பாவங்களிலிருந்து வெளியே வரும்பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார்.

இயேசுவின் இரத்தம் மற்றும் ஞானஸ்நானத்தின் மூலம் நம் வாழ்நாளின் எல்லா மீறுதல்களுக்குமான பாவக்கிரயத்தைச் செலுத்தினார்

  • நீதிமான்களுக்கு எதிரான சாத்தானின் பொறியென்ன?
  • நீதிமான்களை மீண்டும் பாவிகளாக்கும் படி சாத்தான் அவர்களை வஞ்சிக்கிறான்.

இயேசு சிலுவையிலறையப்பட்டு, உயிரோடெழுந்து பரலோகத்திற்கு சென்றபின், பிசாசும், பொய்யான விசுவாசத்தை பின்பற்றுபவர்களும் சீடர்களிடம் வந்து அவர்களை ஏமாற்ற முயல்வார்கள் என்று அவருக்கு நன்கு தெரியும். பேதுருவின் சாட்சியான நீரே கிறிஸ்து, உயிருள்ள தேவனின் குமாரன்என்பதில் அவன் இயேசுவை விசுவாசித்தான் என்பதைக் காணலாம். ஆயினும் இயேசு பேதுருவுக்கு இன்னுமொரு முறை பாவ மன்னிப்பைக் குறித்து போதிக்க விரும்பினார். நற்செய்தியானது, அவர் உலகின் அனைத்துப் பாவங்களையும் தன்மீது எடுத்துக்கொள்ள அவர் பெற்ற ஞானஸ்நானமாகும். அதனை மீண்டுமொருமுறை பேதுருவுக்கும் அவர் சீடருக்கும், பின் காலத்தில் வரும் நமக்கும் போதிக்க விரும்பினார். நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

எப்பொழுதெல்லாம் இயேசுவின் சீடர்கள் பாவம் செய்தார்களா அப்பொழுது சாத்தான் அவர்களை இச்சிக்கச் செய்து ஆக்கினைக்குபடுத்துவான். அவன் கூறுவான் நீ பாவம் செய்தால், நீ எப்படி பாவங்களின்றி இருக்க முடியும்! நீ இரட்சிக்கப்படவில்லை. நீ ஒரு பாவி.இதனைத் தடுக்கும் விதமாக, இயேசு அவர்களிடம், அவர்களின் இறந்தகால, நிகழ்கால, எதிர்கால பாவங்களையெல்லாம் அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதன் மூலம் ஏற்கெனவே கழுவிட்டதாகக் கூறினார்.

நான் ஞானஸ்நானம் பெற்றதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! நான் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யும் பாவங்களையும் மனித குலத்தின் மூலப்பாவத்தையும் கழுவிப்போடவே. நான் ஏன் ஞானஸ்நானம் பெற்றேன் என்றும் நான் ஏன் சிலுவையில் அறையப்பட்டு மரித்தேன் என்றும் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இயேசு தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவியதன் மூலம், அவரின் ஞானஸ்நானத்தினால் அவர்களுடைய தினப்பாவங்களை ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக சிலுவையில் நியாயத்தீர்ப்பைப் பெறுவார் என்றும், அவர்களுக்கு காண்பிக்கவே.

நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதால், இப்பொழுது, நீங்களும் நானும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையானோம். இயேசு நமக்காக ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார். அவர் தம்முடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். யாரெல்லாம் பாவ பரிகார நற்செய்தியைக் கேட்டு அதனை விசுவாசிக்கிறார்களோ, யாரெல்லாம் சத்தியத்தை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவர்.

அப்படியானால் ஒருவன் இரட்சிக்கப்பட்டதற்கு பிறகு என்ன செய்யவேண்டும்? ஒருவன் தன் பாவங்களை தினமும் ஒப்புக்கொண்டு நற்செய்தியாகிய அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகிய ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் அளிக்கும் இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும். இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் மூலம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என்ற நற்செய்தியை ஒருவன் தன் இருதயத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

நீ மீண்டும் பாவம் செய்வதால், மீண்டும் பாவியாகி விடுவாயா? இல்லை. இயேசு நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்று அறிந்த பின் நாமெப்படி மறுபடியும் பாவிகளாவோம்? இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமுமே நற்செய்தியாகிய நம் எல்லாப் பாவங்களுக்குமான பாவமன்னிப்பாகும். இந்த பாவக்கிரயமாகிய மூல நற்செய்தியை விசுவாசிக்கும் யாவரும் நீதிமானாக' மறுபடியும் பிறப்பர்.

நீதிமானால் மீண்டும் பாவியாக முடியாது

  • நீதிமானால் ஏன் மீண்டும் பாவியாக முடியாது?
  • அவர்களின் வாழ்நாளின் பாவங்களுக்கெல்லாம் இயேசுவானவர் ஏற்கெனவே பாவக்கிரயம் செலுத்தி விட்டதால்.

நீங்கள் நீர் மற்றும் ஆவியாகிய பாவக்கிரயம் செலுத்திய நற்செய்தியை விசுவாசித்திருந்தும், உங்கள் அன்றாட மீறுதல்களினால் நீங்கள் பாவியாகவே இருப்பதாக உணர்ந்தால், இயேசு ஞானஸ்நானம் பெற்ற யோர்தானுக்கு உங்களின் பாவங்களை எடுத்துபோட நீங்களும் போகவேண்டியிருக்கும். நீங்கள் விடுதலைப் பெற்ற பின் மீண்டும் பாவியானீர்களானால், இயேசு மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டும். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தினால் வரும் உங்கள் பாவக்கிரயத்தில் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும். அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு உங்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவே உங்கள் இரட்சகர் என்பதில் அலைபாயும் விசுவாசமுள்ளவர்களாய் நீங்கள் இருக்கவேண்டும்.

இயேசுவை உங்கள் இரட்சகராக விசுவாசிக்க வேண்டும் என்பதன் பொருள், உங்கள் வாழ்நாளின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்ட இயேசுவின் ஞானஸ்நானத்தை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதாகும். நீங்கள் உண்மையாகவே இயேசுவின் ஞானஸ்நானம், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசித்தால், நீங்கள் எத்தகையப் பாவத்தைச் செய்தாலும் நீங்கள் பாவியாகவே முடியாது. உங்கள் விசுவாசம் மூலம் உங்கள் முழுவாழ்வின் எல்லா பாவங்களிருந்தும் நீங்கள் மீட்கப்பட்டீர்கள்.

நம்முடைய பலவீனத்தால் நாம் செய்யும் பாவங்கள் உட்பட நம்முடைய எதிர்கால பாவங்களையும் கூட இயேசுகிறிஸ்து கழுவிப் போட்டார். அவருடைய ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை இயேசு உணர்த்த விரும்பியதால், அவரின் ஞானஸ்நானமான பாவக்கிரய நற்செய்தியைக் குறிக்கும் விதமாக அவர் தம் சீடர்களின் கால்களை நீரினால் கழுவினார். கர்த்தரின் அளவில்லாத உலகின் அனைத்துப் பாவங்களுக்குமான பாவ விடுதலையை நிறைவேற்றவும், எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவும், இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, சிலுவையிலறையப்பட்டு மீண்டும் உயிரோடெழுந்து பரலோகத்திற்கு ஏகினார். அதன் பதிலாக, அவருடைய சீடர்களால், நற்செய்தியான பாவ விடுதலையையும், இயேசுவின் ஞானஸ்நானத்தையும், சிலுவையையும் மீண்டும் உயிரோடெழும்பியதையும், தம் வாழ்வின் முடிவு பரியந்தமும் பிரசங்கிக்க முடிந்தது.

பேதுருவின் மாமிச பலவீனம்

  • பேதுரு இயேசுவை ஏன் மறுதலித்தான்?
  • அவன் பலவீனனாக இருந்ததினாலே.

பேதுரு தலைமை ஆசாரியனான காய்பாவின் ஊழியர்களை எதிர்கொண்டு, அவர்கள் அவனை இயேசுவைப் பின்பற்றுபவன் என்று குற்றப்டுத்தியபோது இல்லை, நான் இந்த மனிதனை அறியேன்' என்று இரண்டு முறை மறுதலித்ததாக வேதாகமம் நம்மிடம் கூறுகிறது, பிறகு முன்றாம் முறையும் மறுதலித்து சபித்தான்.

இந்த வசனங்களை வாசிப்போம். மத்தேயு 26:69, அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். அவன், வாசல் மண்டபத்திற்குப் போன பொழுது வேறொருத்தி, அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். சற்று நேரத்திற்குப் பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான் ( மத்தேயு 26:69-75).

பேதுரு உண்மையாகவே இயேசுவை விசுவாசித்து அவரை விசுவாசத்துடன் பின்பற்றினான். அவன் இயேசுவை தன் கர்த்தராகவும், இரட்சகராகவும், தீர்க்கதரிசியாகவும் விசுவாசித்தான். ஆனால் இயேசுவானவர் பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, இயேசுவினிடம் சேர்ந்திருப்பது மிகவும் அபாயகரமானதாக இருந்த படியால், அவன் அவரை மறுதலித்து சபித்தான்.

பேதுருவுக்கு இயேசுவைத் தான் மறுதலிக்கப் போவதைக் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் அவன் அப்படிச் செய்வான் என்று இயேசுவுக்குத் தெரியும். அவன் பலவீனன் என்று இயேசுவிற்குத் தெரியும். ஆகவே, இயேசு பேதுருவின் கால்களைக் கழுவி யோவான் 13இல் எழுதப்பட்டுள்ளபடி இரட்சிப்பின் நற்செய்தியை அவனுக்குப் போதித்தார், “நீ எதிர்காலத்தில் பாவஞ்செய்வாய், ஆனால் நான் உன் எதிர்காலப் பாவங்களையும் ஏற்கெனவே கழுவிவிட்டேன்.

அவனுடைய வாழ்விற்கு ஆபத்து வந்தபோது பேதுரு இயேசுவை மறுதலிக்கவேச் செய்தான். ஆனால் இப்படிச் செய்யச் செய்தது அவன் சரீரத்தின் பலவீனமே. ஆகவே, அவர்களுடைய எதிர்கால மீறுதல்களிலிருந்து அவர் சீடர்களை இரட்சிக்க, இயேசு அவர்களின் கால்களைக் கழுவினார்.

உங்களின் எதிர்காலப் பாவங்களைக் கூட கழுவிப் போட்டேன். உங்கள் எல்லாரின் பாவங்களையும் நான் ஞானஸ்நானம் பெற்று அவற்றை ஏற்றுக்கொண்டதால் நான் சிலுவையில் அறையப்படவேண்டும், நான் உங்களனைவருக்கும் உண்மை இரட்சகராகும்படி நான் அவையாவற்றுக்கும் கிரயம் செலுத்த வேண்டும். நானே உங்கள் இரட்சகராகிய கர்த்தர். உங்கள் பாவங்களுக்காக நான் முழுக்கிரயத்தையும் செலுத்துவேன். என்னுடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நான் உங்கள் மேய்ப்பராவேன். நானே உங்கள் இரட்சிப்பின் மேய்ப்பர்.

இந்த உண்மையை அவர்களிருதயத்தில் ஆழமாக விதைக்க, பஸ்கா பண்டிகையின் பந்திக்குப் பிறகு இயேசு அவர்களின் கால்களைக் கழுவினார். இதுவே நற்செய்தியின் சத்தியமாகும்.

நம்முடைய மாமிசம் பலவீனமானதாலே நாம் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தாலும், நாம் மறுபடியும் பாவம் செய்வோம். நாம் மறுபடியும் பாவம் செய்யக் கூடாது தான். ஆனால் பேதுருவைப் போல் நாம் மிகக் கடினமான பிரச்சினைகளைச் சந்திக்கும் போது, அப்படிச் செய்ய விரும்பாவிட்டாலும் நாம் பாவம் செய்ய விரும்புகிறோம். நாம் மாமிசத்தில் வாழ்வதால், சில சமயங்களில் நம் பாவங்களினால் அழிவை நோக்கிப் போகிறோம். இந்த சுதந்திரமான உலகில் நாம் வாழும் வரை இச்சரீரம் பாவஞ்செய்தே தீரும், ஆனால் இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் சிலுவை இரத்தத்தினாலும் அப்பாவிகளுக்கான கிரயத்தைச் செலுத்திவிட்டார்.

இயேசு நம் இரட்சகர் என்று நாம் மறுதலிப்பதில்லை, ஆனால் நாம் மாமிசத்தில் வாழும்பொழுது, நாம் கர்த்தரின் சித்தத்திற்கு எதிராக தொடர்ந்து பாவம் செய்து கொண்டேயிருக்கிறோம். நாம் மாமிசத்தில் பிறந்ததே அதன் காரணம்.

நாம் மாமிசத்தில் பாவிகள் என்பது இயேசுவிற்கு தெரியும். இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் நம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயம் செலுத்தியதால் அவர் நம் இரட்சகரானார். அவரின் இரட்சிப்பையும், மீண்டும் உயிரோடெழுந்ததையும் விசுவாசிப்போர், தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடச் செய்தார்.

யோவான் ஸ்நானன் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்துடனேயே நான்கு சுவுசேஷங்களும் தொடங்குகின்றன. இரட்சிப்பின் நற்செய்தியையும், மறுபடியும் பிறக்கும் நற்செய்தியையும் நிறைவேற்றுவதே அவர் மனித வாழ்வின் நோக்கம்.

  • மாமிசத்தினால் நாம் எவ்வளவு காலம் பாவம் செய்வோம்?
  • நாம் மரிக்கும் தினம் வரை நம் வாழ்வு முழுவதும் பாவம் செய்வோம்.

பேதுரு ஒருமுறையல்ல, இரண்டு முறையல்ல, மூன்று முறை சேவல் கூவும் முன்னே மறுதலித்தான், அது அவன் இருதயத்தை எத்தனையாய் உடைத்திருக்கும்? எத்தனை வெட்கத்தை அவன் உணர்ந்திருப்பான்? அவருக்கு எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேனென்று இயேசுவிடம் அவன் உறுதியளித்திருந்தான். அவன் மாமிசம் பலவீனமுடையதாலே அவன் பாவஞ்செய்தான், மூன்றுமுறை இயேசுவை மறுதலித்ததை எண்ணி எத்தனை துன்பத்தை அவன் உணர்ந்திருப்பான்? இயேசுவை மறுபடியும் சந்தித்தபோது எத்தனை கூச்சத்தை அவன் உணர்ந்திருப்பான்?

ஆனால் இயேசுவிற்கு இவை எல்லாமும், இன்னும் அநேகமும் தெரியும். ஆகவே, அவர் கூறினார். நீ மீண்டும் பாவம் செய்வாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய பாவங்கள் உன்னை இடறச் செய்து உன்னைப் பாவியாக மறுபடியும் திருப்பாதிருக்கும் படியாகவும், என்னிடம் நீ மீண்டும் வருவது சாத்தியமாகவும், என் ஞானஸ்நானத்தின் மூலம் அந்த எல்லாப் பாவங்களையும் நான் ஏற்கெனவே சுமந்து தீர்த்தேன். நாம் ஞானஸ்நானம் பெற்று எல்லாப் பாவங்களுக்கும் நியாயந்தீர்க்கப்பட்டதால் உனக்கு நான் முழுமையான இரட்சகரானேன். நான் உன் கர்த்தரும், உன் மேய்ப்பனுமானேன். உன் பாவங்களுக்கு கிரயஞ்செலுத்தியதான நற்செய்தியை விசுவாசி. நீ மாமிசத்தின்படி பாவங்களைச் செய்தாலும் நான் உன்னை தொடர்ந்து நேசிப்பேன். நான் உன் மீறுதல்களையெல்லாம் ஏற்கெனவே கழுவி விட்டேன். உன் பாவக்கிரய நற்செய்தியானது நிரந்தரமானது. உனக்கான எனது அன்பும் நிரந்தரமானது

இயேசு பேதுருவினிடமும் மற்ற சீடர்களிடமும் கூறினார், “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லைஇந்த நற்செய்தியை யோவான் 13இல் அவர் கூறியதற்கான காரணம், மக்கள் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பது முக்ககியமானதாயிருந்தது. இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

9ஆம் வசனத்தில், “அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூடக் கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்.

அன்பு நண்பர்களே, எதிர்காலத்தில் நீங்கள் மாமிசத்தின்' பாவத்தைச் செய்வீர்களா, இல்லையா? நீங்கள் செய்வீர்கள். ஆனால் இயேசு நம் வருங்காலப் பாவங்களையும், நம் மாமிசத்தின் எல்லா மீறுதல்களையும் தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் ஏற்கெனவே கழுவி விட்டதாகக் கூறினார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நற்செய்தியாகிய பாவ விடுதலையின் சத்திய வார்த்தைகளை அவர் தம் சீடர்களிடம் தெளிவாக கூறினார்.

நாம் நம் எல்லா பலவீனங்களுடனும், மாமிசத்தில் வாழ்ந்திருப்பதால் நாம் பாவம் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது. இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். அவர் நம் தலையையும் உடம்பையும் மட்டுமல்ல, நம் கால்களையும் எதிர்காலப் பாவங்களையும் கூட கழுவினார். இதுவே இயேசுவின் ஞானஸ்நானத்தின் மறுபடியும் பிறப்பதற்கான நற்செய்தியாகும்.

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின்பு யோவான் ஸ்நானன் சாட்சி கொடுத்தான். இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29) இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதால் அவைக் கழுவப்பட்டன என்று நாம் விசுவாசித்தேயாக வேண்டும்.

இவ்வுலகில் நாம் வாழும்போது, நாம் பாவம் செய்யாமலிருக்க முடியாது. இதனை மிக முக்கியமானதாக நாம் கருத வேண்டும். எப்பொழுதெல்லாம் மாமிச பலவீனம் மேல் வருகிறதோ அப்பொழுது இயேசு நம் பாவங்களையும் உலகின் எல்லாப் பாவங்களையும் பாவக்கிரயத்தின் நற்செய்தியின் மூலம் கழுவி அவற்றிற்கு தம் இரத்தத்தை விலையாகக் கொடுத்தார் என்று நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நம் இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து அவரிற்கு நன்றி செலுத்த வேண்டும். இயேசுவே நம் இரட்சகரும் தேவனுமானவர் என்று நாம் அறிக்கைச் செய்வோமாக. கர்த்தரைப் புகழுவோமாக.

இவ்வுலகிலுள்ள அனைவரும் மாமிசத்தின் படி பாவஞ்செய்கிறார்கள். மக்கள் தம் வாழ்நாளில் மாமிச பாவங்களுடன் மரிக்கின்றனர். மக்கள் தொடர்ந்து தம் மாமிசத்தினால் பாவம் செய்கின்றனர்.

மக்களின் இருதயங்களிலிருக்கும் தீய சிந்தனைகள்

  • ஒருவனை அழிப்பது எது?
  • வேறு வகையான பாவங்களும் தீயச் சிந்தனைகளும்.

மத்தேயு 15:19-20இல் இயேசு கூறினார். எப்படியெனில் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும் கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். கை கழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.இருதயத்திலுள்ள வேறு வகையான பாவங்கள் ஒருவனைத்/ஒருவளைத் தீட்டுப் படுத்துவதால் அவன்/அவள் சுத்தமில்லாதவன்.

தன் சொந்த சுபாவத்தை ஒருவன் உணர்ந்துகொள்ள வேண்டும்

  • எல்லா மனிதர்களின் இருதயத்திலும் இருப்பது என்ன?
  • பண்ணிரன்டு வகையான பாவங்கள்  (மாற்கு 7:21-23 )

நம்மால் இவ்வாறு கூறமுடியவேண்டும், “அந்த பண்ணிரன்டு வகையான பாவங்களும் மக்களின் இருதயங்களில் இருக்கின்றன. என்னிருதயத்திலும் அவை யாவும் இருக்கின்றன. வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள பண்ணிரன்டு வகையான பாவங்களும் என்னுள் இருக்கின்றன.நாம் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதற்கு முன் நம் இருதயங்களிலுள்ள பாவங்களை ஒத்துக் கொள்ள வேண்டும். கர்த்தருக்கு முன்பாக நாம் முழுமையான பாவிகள் எனபதை ஒத்துக்கொள்ள வேண்டும். நான் அவற்றை அடிக்கடி கூறுவதில்லை. நம்மில் அநேகர் நம் பாவங்களுக்கு சாக்கு கூறுகிறோம். அச்சிந்தனைகள் என்னிருதயத்தில் எப்போதும் இருந்ததில்லை, ஒரு நொடியில் விழுந்து போனேன்.என்று கூறுகிறார்கள்.

ஆனால் இயேசு மனிதர்களைக் குறித்து என்ன கூறுகிறார்?

ஒருவனின் இருதயத்தில் இருந்து வருவதே அவனைத் தீட்டுப்படுத்தும் என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். மக்களின் உள்ளே திய சிந்தனைகள் இருக்கின்றன என்று அவர் நம்மிடம் கூறினார். நீ என்ன நினைக்கிறாய்? நீ நல்லவனா அல்லது தீயவனா? எல்லோரிடமும் தீயச் சிந்தனைகளிருப்பது உனக்குத் தெரியுமா? ஆம், ஔவ்வொருவரின் சிந்தனைகளும் தீயவைகளே.

சில வருடங்களுக்கு முன்பு சியோலில் உள்ள சம்பூங் பல்பொருள் அங்காடியின் கட்டிடம் திடீரென விழுந்தது. தம் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினர் ஆழமான துயரத்தில் இருந்தனர். ஆனால் அந்த விபத்தின் காட்சியைக் காண அநேக மக்கள் அங்குச் சென்றனர்.

சிலர் நினத்தனர், ‘எத்தனை பேர் இறந்தனர்? 200? இல்லை, அது மிகவும் குறைவான எண் 300? இருக்கலாம்? நல்லது, இறந்து போனவர்களின் எண்ணிக்கை குறைந்தது ஆயிரமாக இருந்தால் அது ஆர்வமூட்டுவதும், பெரிதான காட்சியுமாகும்ஸ.' மனிதர்கள் இருதயங்கள் இத்தனைத் தீயவையாக இருக்கமுடியும். நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இறந்தவர்களுக்கு அது எத்தனை அவமரியாதை. அக்குடும்பங்களுக்கு அது எத்தனை கொடூரமானது! அநேகர் பணமில்லாது அழிந்துபோகும் நிலைக்குள்ளாயினர்.

சில பார்வையாளர்கள் இரக்கமே இல்லாதவர்கள் என்பது தெளிவு. அதிகமானோர் இறந்திருந்தால் அது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்திருக்கும்! எத்தனை பெரிதான சாட்சி! இதுவே பந்து விளையாடும் மைதானத்தில் மக்கள் நிறைந்திருக்கும் போது நடந்திருந்தால் என்ன? ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பர், அப்படி இல்லையா? , அது சரி! அது இதனைவிட நிச்சயமாக அதிக ஆர்வமூட்டுவதாக அமைந்திருக்கும்!' இப்படிச் சிலர் நினைத்திருப்பர்.

சில சமயங்களில் மக்கள் எத்தனைத் தீயவர்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இத்தகைய தீயச் சிந்தனைகளை உரக்கக் கூற மாட்டார்கள் தான். அவர்கள் தம் நாக்கை சப்புக் கொட்டி தம் இரக்கத்தை விவரிப்பர். அனால் இரகசியமாக, அவர்கள் இருதயத்தில், அது மிகவும் பெரிய காட்சியாக வேண்டுமென காத்திருக்கின்றனர். அவர்களின் ஆர்வங்கள் பாதிக்கப்படாதவரையில், ஆயிரக்கணக்கானோர் மரித்து போகும் அத்தகைய பயங்கர விபத்துக்களைக் காண அவர்கள் விரும்புகின்றனர். நம்மில் அநேகர் மறுபடியும் பிறப்பதற்கு முன் இப்படித் தானிருந்தோம்.

ஒவ்வொருவரின் இருதயத்திலும் கொலை இருக்கிறது

  • நாம் ஏன் பாவம் செய்கிறோம்?
  • நம் இருதயத்தில் தீய சிந்தனைகள் இருப்பதினால்.

ஒவ்வொருவரின் இருதயத்தின் உள்ளும் கொலை இருப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஆனால் அநேகர் இதனை மறுப்பர். நீங்கள் அதனை எப்படிக் கூறலாம்! என்னிருதயத்தில் கொலைச் சிந்தனைகள் எதுவுமில்லை! இத்தகைய ஒன்றை நீங்கள் எப்படி எண்ணக்கூட முடியும்!அவர்களிருதயத்தில் கொலை இருக்கிறதென்று அவர்கள் எப்போதும் ஒத்துக்கொள்வதேயில்லை. அவர்கள், கொலைச் செய்பவர்கள் வேறு குலப் பிறப்பினர் என்று எண்ணுகின்றனர்.

அன்றையத் தின செய்தியில் வந்த தொடர் கொலையாளியும் அவர்கள் வீட்டில் அம்மக்களைக் கொன்று அவர்களை எரித்த அந்தக் கும்பலுமே, அவர்கள் இருதயத்தில் கொலைப்பாதகம் இருக்கப்பட்டவர்கள்! அவர்கள் வேறு குலம். அவர்களைப் போல் நானில்லை! அவர்கள் மோசமானவர்கள், கொலைபாதகர்! அவர்கள் கோபமும் வெறுப்பும் கொண்டவர்களாகி இத்தீயப் பிறவிகள் உலகின் பிறப்பிலிருந்து அழிக்கப் படவேண்டும். அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனையளிக்க வேண்டும்!என்று ஏசுவர்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்த கொலைச் சிந்தனைகள் கோபங்கொண்ட மக்களின் இருதயங்களிலும் தொடர் கொலையாளிகள் மற்றும் கொலையாளிகள் இருதயங்களிலும் இருக்கிறது. எல்லா மனிதர்களின் இருதயங்களிலும் கொலையிருப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நம்மை ஊடுருவி நோக்கும் கர்த்தரின் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிருதயத்தில் கொலையுள்ள பாவி நான்என்று கூறவேண்டும்.

ஆம், எல்லா மக்களின் இருதயங்களினுள்ளேயும் கொலை உட்பட எல்லா தீய சிந்தனைகளும் இருப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறினார். கர்த்தரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோமாக. மனிதர்களின் சந்ததியினர் மேலும் தீயவர்களானபடியால், அனைத்து வகையான தற்காப்பு கருவிகளும் கொலைக் கருவிகளாயின. இது நம்மிருதயத்தில் கொலையிருப்பதின் விளைவாகும். நீங்கள் கோபத்தினாலோ அல்லது பயத்தினாலோ கொலை செய்யக்கூடும். நாம் அனைவரும் கொலை செய்வோம் என்று நான் கூறவில்லை. ஆனால் நம்மிருதயங்களில் அத்தகைய சிந்தனைகளிருக்கின்றன.

மக்களனைவரும் தீய சிந்தனைகளுடன் பிறந்தவர்களான படியால், நம் எல்லோரின் இருதயங்களிலும் அவை இருக்கின்றன. சிலர் கொலை செய்வதில் முடிவர், இது அவர்கள் பிறவி கொலைகாரர்கள் என்பதினால் அல்ல. அது நாமெல்லாம் கொலைப்பாதகர்களாக முடியும் என்பதனாலேயே. இதுவே உண்மை. இந்த உண்மைக்கு யாரும் விலக்கல்ல.

ஆகவே நமக்கான சரியான வழி கர்த்தரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்படிவதே. நம்முடைய இருதயங்களிலே தீயச் சிந்தனைகள் இருப்பதால் நாம் இவ்வுலகில் பாவஞ்செய்கிறோம்.

நம்மிருதயங்களிலுள்ள விபசாரம்

ஒவ்வொருவரின் இருதயத்திலும் விபசாரம் இருப்பதாக கர்த்தர் கூறுகிறார். இதனை ஒத்துக்கொள்கிறீர்களா? உன்னிருதயத்தில் விபசாரம் இருக்கிறதென்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா? ஆம், ஒவ்வொருவரின் இருதயத்திலும் விபசாரம் இருக்கிறது.

அதனாலேயே விபச்சாரத்தொழிலும் மற்ற பாவக்காரியங்களும் நம் சமூகத்தில் செழித்து வளருகின்றன. வரலாற்றின் எல்லாக் காலக்கட்டங்களிலும் இது பணம் சம்பாதிப்பதற்கான அறுதியான ஒரு வழியாகும். மற்ற தொழில்கள் பொருளாதார சீர்குலைவினால் கஷ்டப்படும், ஆனால் எல்லா மக்களின் இருதயங்களிலும் விபசாரம் சஞ்சரிப்பதால் இந்த தீய தொழில் கஷ்டத்திற்குட்படாது. 



பாவிகளின் கனியோ பாவம்

  • மனித குலத்தை எதனுடன் ஒப்பிடலாம்?
  • பாவக்கனிகளைச் சுமக்கும் மரத்துடன்.

ஆப்பிள் மரம் ஆப்பிளைச் சுமப்பது போலும், பேரிக்காய் பேரியையும், ஈச்சமரம் ஈச்சம்பழத்தையும் பேர்சிம்மன் மரம் பேர்சிம்மன் பழத்தையும் கொடுப்பது போல், 12 வகையான பாவங்களுடைய இருதயத்துடன் பிறந்த நாம், பாவக் கனிகளையே சுமப்போம்.

ஒருவனின் இருதயத்தில் இருந்து வெளியே வருவதே அவனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கூறினார். இதனை ஒத்துக்கொள்கிறீர்களா? நம்மால் இயேசுவின் வார்த்தையை ஒத்துக்கொள்ள மட்டுமே முடியும். ஆம், நாம் பாவிகளின் சந்ததியினர், தீயவற்றைச் செய்பவர்கள். ஆம், நீர் சரியாக கூறினீர், கர்த்தரேஎன்று கூற வேண்டும். ஆம், நாம் நம் தீமையை ஒத்துக்கொள்ள வேண்டும். கர்த்தருக்கு முன்பாக நமக்கு நாமே உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்து கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தது போல், நாமும் கூட கர்த்தரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்ப்படியவேண்டும். இதுவே நாம் நீரினாலும் ஆவியினாலும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படுவதற்கான ஒரே வழியாகும். இவைகளெல்லாம் கர்த்தரிடமிருந்து வரும் ஈவுகள்.

எனது நாடு நான்கு அழகிய காலங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலமும் செல்கையில் வெவ்வேறு வகையான மரங்கள் அவற்றின் கனியைச் சுமக்கும். அது போலவே, நம் இருதயங்களில் இருக்கும் பண்ணிரன்டு வகையான பாவங்களும் நம்மைப் பற்றிக்கொண்டு, நம்மை விடாமல் தொடர்ந்து பாவஞ்செய்யும்படி வழி நடத்துகின்றன. இன்று நம் இருதயத்தைப் பற்றிக் கொண்டிருப்பது கொலையாக இருக்கலாம். நாளை அது விபசாரமாகும்.

பிறகு மறுநாளில், தீய சிந்தனைகள், பிறகு விபசாரம், களவு, பொய்சாட்சிஸ இன்னும் பிற. வருடம் முழுவதும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு மணிநேரமும் நாம் பாவம் செய்கிறோம். ஏதாவது ஒரு வகையான பாவம் செய்யாமல் ஒரு தினமும் கடப்பதில்லை. நாம் பாவமில்லாமல் இருக்க தொடர்ந்து உறுதியெடுக்கிறோம். ஆனால் நாம் இந்த வழியில் பிறந்தவர்களாகையால் நம்மால் பாவஞ்செய்யாமல் இருக்க முடியாது.

அதற்கு வேண்டாமென்று ஆப்பிள் மரம், ஆப்பிள் பழங்களைக் கொடுக்க மறுப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? “நான் ஆப்பிளைக் கொடுக்க மாட்டேன்!அது அக்கனியைக் கொடுக்காதிருக்கும்படி தன் மனதைத் திடப்படுத்தினாலும், அதனால் எப்படி ஆப்பிளைக் கொடுக்காதிருக்க முடியும்? எப்படியாயினும் வசந்த காலத்தில் பூக்கள் மலரும், வெயில் காலத்தில் ஆப்பிள் காய்த்து பழமாகும், இலையுதிர்காலத்தில் பறித்து சாப்பிட பழம் தயாராக இருக்கும்.

இதுவே இயற்கையின் நியதி, அது போலவே பாவிகளும் இயற்கையின் நியதியைப் பின்பற்றியாக வேண்டும். பாவிகளால் பாவக்கனிகளைக் கொடுப்பதிலிருந்து வேறு வழியில்லை.

ஞானஸ்நானமும் இயேசுவின் சிலுவையும் நம் பாவங்களுக்கான பிராயச்சித்தமாகும்

  • பாவப் பிரயச்சித்தம் என்பதன் பொருள் என்ன?
  • இயேசுவின் ஞானஸ்நானம் ( கை வைத்தல்) மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் பாவத்திற்கான கூலியைக் கொடுப்பதாகும்.

தீயவர்களின் சந்ததியினரான பாவிகள், கர்த்தருக்கு முன்பாக அவர்கள் பாவங்களுக்கு எப்படி பிரயச்சித்தம் செய்து அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்துடன் வாழ்வார்கள் என்று காண வேதாகமத்திலிருந்து ஒரு பந்தியை வாசிப்போமாக. இதுவே நற்செய்தியாகிய பாவப்பிரயச் சித்தமாகும்.

லேவியராகமம் 4 இல் கூறப்பட்டுள்ளது. சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரிய வரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டு வந்து, பாவ நிவாரணபலியின் தலை மேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகன பலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரண பலியைக் கொல்லக்கடவன். அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலி பீடத்தின் அடியிலே ஊற்றி விட்டு, சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பது போல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலி பீடத்தின் மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்மையாய் அவனுக்குப் பாவ நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்” ( லேவியராகமம் 4:27-31 ).

பழைய ஏற்பாட்டின் நாட்களின் போது, மக்கள் தம் பாவங்களுக்கு எப்படி பாவ நிவிர்த்தி செய்தார்கள்? அவர்கள் தம் கைகளை பாவ நிவாரண பலியின் தலை மீது வைத்து அவர்களின் பாவங்களை அதன் மீது சுமத்தினார்கள்.

அது லேவியராகமத்தில் எழுதப்பட்டுள்ளது. உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலி செலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டு வந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து” (லேவியராகமம் 1:2-4).

இஸ்ரவேலின் பாவங்கள் நிவிர்த்திக்கும்படியாக கர்த்தர் அவர்களைப் பாவபலியினை ஏற்பாடு செய்யும் படிச் செய்தார். அவர்கள் தம் பாவங்களை சுமத்தும்படியாக, அவர்கள் பலி மிருகத்தின் தலை மீது கைகளை வைக்கும்படி கூறினார். ஆசரிப்புக் கூடாரத்தின் உட்பிரகாரத்தில், தகன பலியிடும் மேடை இருந்தது. அது புல்பிட் மேசையை விட சிறிது பெரிய பெட்டி போன்றும் அதன் நான்கு முனைகளில் கொம்பும் இருந்தது. அவர்கள் தம் பாவங்களை பாவ நிவாரணப் பலியின் தலையில் சுமத்துவதன் மூலமும் அதன் சதையை தகன பலிபீடத்தின் மீது வைத்து எரித்தும் தம் பாவங்களுக்கு பிரயச்சித்தம் செய்தனர்.

லேவியராகமத்தில் கர்த்தர் மக்களிடம் கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்துஎன்றார். அவர்கள் தம் கைகளை அதின் தலையின் மேல் வைத்த போது அவர்களுடையப் பாவங்கள் பாவப்பலியின் மீது சுமத்தப்பட்டன, அதன் பிறகு பாவி அப்பலி மிருகத்தின் கழுத்தை வெட்டி தகன பலி மேடையின் நான்கு மூலைகளிலும் உள்ள கொம்புகளில் அதின் இரத்தத்தை ஊற்றவேண்டும்.

அதன் பிறகு, பலியின் உடம்பு அதின் உள்ளுறுப்புகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, அதன் சதை துண்டு துண்டாக வெட்டப்பட்டு தகனபலி பீடத்தின் மீது சாம்பலாக்கப்பட்டது. பிறகு அந்த சுகந்த வாசனை பாவ நிவிர்த்தியாக கர்த்தருக்கு படைக்கப்பட்டது. இப்படியாகவே அவர்கள் தம் அன்றாடப் பாவங்களுக்கு நிவிர்த்தி செய்தனர்.

பிறகு அவர்களின் வருடாந்தரப் பாவங்களுக்கு பாவ நிவாரணப் பலியொன்று கொடுக்கப்பட்டது. அது அன்றாடப் பாவங்களுக்கான பாவ நிவாரணப் பலியிலிருந்து வேறுபட்டது. இங்கு தலைமை ஆசாரியன் இஸ்ரவேலின் அனைத்து மக்களின் சார்பாகவும் தன் கைகளை பலிமிருகத்தின் மேல் வைத்து அதின் இரத்தத்தை கிருபாசனத்தின் கிழக்குப் பக்கத்தில் ஏழுமுறைத் தெளித்தான். அது போலவே ஒவ்வொரு வருடமும் ஏழாம் மாதம் பத்தாம் திகதியிலே இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக உயிருள்ள ஒரு ஆட்டின் தலையில் கைவைப்பதுவும் நடந்தேறியது. (லேவியராகமம் 16:5-27)

  • பழைய ஏற்பாட்டின் பாவ பலிக்கு ஒப்பானவர் யார்?
  • இயேசுகிறிஸ்து.

இப்பொழுது, இந்தப் பலியிடும் முறை புதிய ஏற்பாட்டில் எப்படி மாறியுள்ளது என்றும், எத்தனை வருடங்களானாலும் எப்படி கர்த்தருடைய கற்பனைகள் மாறாதிருக்கிறது என்றும் பார்ப்போம்.

இயேசு ஏன் சிலுவையில் மரிக்கவேண்டும்? கர்த்தர் தம் குமாரனை சிலுவையில் மரிக்கச் செய்யும் அளவு அவர் இவ்வுலகில் என்ன பாவம் செய்தார்? அவரைச் சிலுவையில் மரிக்க கட்டாயப்படுத்தியது யார்? உலகின் எல்லாப் பாவிகளும், நாமும் உட்பட, பாவத்தில் விழுந்தபோது, நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

அவர் யோர்தானில் யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற்று, மனிதகுலத்தின் சார்பாக அனைத்துப் பாவங்களுக்குமாக சிலுவையில் தண்டனையை ஏற்றார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற முறையும், அவர் சிலுவையில் இரத்தம் சிந்தியதும், பழைய ஏற்பாட்டின் பாவ பலி மீது கைவைத்து இரத்தம் சிந்தும் பாவ நிவாரணப் பலிக்கு ஒத்ததாகும்.

இப்படித்தான் பழைய ஏற்பாட்டில் செய்யப்பட்டது. ஒரு பாவி தன் கையை பாவ பலியின் மீது வைத்து அறிக்கைச் செய்தான். கர்த்தரே, நான் பாவஞ் செய்தேன். நான் கொலையும் விபசாரமும் செய்தேன்.பிறகு அவன் பாவங்கள் பாவ காணிக்கையின் மீது சுமத்தப்பட்டது.

பாவியானவன் எப்படி பாவக்காணிக்கையின் கழுத்தை வெட்டி கர்த்தருக்கு முன் படைத்தானோ. அது போலவே இயேசுவும் நம் எல்லாப் பாவங்களுக்கும் பாவ நிவாரணப் பலியானார். நம்மை இரட்சிக்க இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தினார். இப்படியாக தம்மைப் பலியிட்டதன் மூலம் நம் பாவங்களுக்கெல்லாம் நிவர்த்திச் செய்தார்.

இயேசு மரித்தது நம்மாலேயே. அதனை நாம் நினைக்கையில், களங்கமில்லாத மிருகங்கள் மக்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் பலி கொடுக்கப்பட்டது என்பதன் சரியான பொருள் என்ன? அம்மிருகங்களுக்கு பாவம் என்றால் என்னவென்று தெரியுமா? விலங்குகளுக்கு பாவம் என்றால் என்னவென்று தெரியாது. அவற்றால் எல்லா மக்களின் பாவங்களையும் எடுத்துப்போட முடியாது.

அம்மிருகங்கள் எப்படி முற்றிலும் களங்கம் அற்றவையோ, அது போலவே இயேசுவும் பாவமற்றவராக இருந்தார். அவர் பரிசுத்த தேவன், கர்த்தரின் குமாரன். அவர் எப்போதும் பாவம் செய்ததில்லை. ஆகவே, அவர் 30 வயதுடையவராக இருக்கும்போது யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார்.

நம்முடைய எல்லாப் பாவங்களையும் அகற்ற, அவர் நம்மிடமிருந்து ஏற்றுக்கொண்ட பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். அவருடைய இரட்சிப்பின் ஊழியம் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டது. அது மத்தேயு 3 ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது.



பாவ நிவிர்த்தி நற்செய்தியின் தொடக்கம்

  • யோர்தானில்  யோவான் ஸ்நானனால் இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்.
  • எல்லா நீதியையும் நிறைவேற்றவே.

இங்கு மத்தேயு 3ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளது. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்கு தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

இயேசு 30வயதினராயிருக்கும்போது அவர் ஏன் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்று நாமறிந்து அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் எல்லா மக்களின் பாவங்களுக்கு பாவக்கிரயம் செலுத்தவும் கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றவும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். எல்லா மக்களையும் இரட்சிக்கும் பொருட்டு, களங்கமில்லாத இயேசுகிறிஸ்து, யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்.

இப்படியாக அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் தம்மை கிரயமாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும் பொருட்டு, சத்தியத்தை நாம் தெரிந்து கொண்டு, அச்சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். அவர் அருளிய இரட்சிப்பை விசுவாசித்து இரட்சிக்கப்படுவது நம்மைப் பொறுத்ததாகும்.

இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருள் என்ன? அது பழைய ஏற்பாட்டின் கைவைக்கும் முறைக்கு ஒத்ததாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில், அனைத்து மக்களின் பாவங்களும் பாவ பலியின் மீது கை வைப்பதன் மூலம் அதன் தலையில் சுமத்தப்பட்டது. அது போலவே, புதிய ஏற்பாட்டில் தம்மையே பாவ பலியாக அர்ப்பணித்து, யோவான் ஸ்நானன் மூலம் ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார்.

யோவான் ஸ்நானன் கர்த்தரால் நியமிக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதியும் மனிதர்களிலேயே மிகவும் உயர்ந்தவனுமாவான். மனித குலப் பிரதிநிதியாகவும், எல்லாரின் தலைமை ஆசாரியனாகவும் இயேசுவின் மீது அவன் கைவத்து உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தினான். ஞானஸ்நானம்' என்பது இடம் மாற்றுவது, அடக்கம் பண்ணுதல், கழுவுதல்' என்று பொருள்படும்.

இயேசு ஏன் இவ்வுலகிற்கு வந்தார் என்றும் அவர் ஏன் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்றும் உங்களுக்குத் தெரியுமா? அவரின் ஞானஸ்நானத்தின் பொருளை அறிந்து இயேசுவை நீ விசுவாசிக்கிறாயா? தீயவர்களின் சந்ததியினரான நாம் மாமிசத்தினால் வாழ்நாள் முழுவதும் செய்யும் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்க்க இயேசுவின் ஞானஸ்நானம் உதவியது. நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் பாவ நிவிர்த்தியான மூல நற்செய்தியை முழுமையாக்கும்படி இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்.

மத்தேயு 3:13-17இல், ‘அப்பொழுது', என்று எழுதப்பட்டுள்ளது. அது இயேசு ஞானஸ்நானம் பண்ணப் பட்ட நேரமாகிய, இவ்வுலகின் அனைத்துப் பாவங்களும் அவரின் மீது சுமத்தப்பட்ட நேரத்தைக் குறிப்பதாக பொருள்படுகிறது.

அப்பொழுது' இயேசு மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிரோடெழும்பினார். உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவுவதற்கு, ஒரே தரம் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். கர்த்தருக்கு முன்பாக தம் பாவங்களிலிருந்து விடுதலையாக விரும்பும் அனைவரையும் ஒரேதரமாக அவர் இரட்சித்தார்.

இயேசு ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும்? அவர் ஏன் தலையில் முள் முடியைத் தரித்து சாதாரண கிரிமினல் போல் பிலாத்துவின் நீதிமன்றத்தில் தீர்க்கப்படவேண்டும்? அவர் ஏன் சிலுவையிலறையப்பட்டு சாகும்படி இரத்தம் சிந்த வேண்டும்? ஞானஸ்நானத்தின் மூலம் தம்மீது ஏற்றுக்கொண்ட, என் பாவங்களும் உன் பாவங்களுமாகிய இவ்வுலகின் அனைத்துப் பாவங்களுமே மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் காரணமாயிற்று. நம்முடைய பாவங்களுக்காக, அவர் சிலுவையில் மரிக்க வேண்டியதாயிருந்தது.

கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்ற இரட்சிப்பின் வார்த்தைகளை விசுவாசிப்பதுடன் அவருக்கு பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இயேசுவினுடைய ஞானஸ்நானம், அவரின் சிலுவை, அவரின் உயிர்த்தெழுதல் இல்லாது நமக்கு இரட்சிப்பு இல்லை.

உலகின் அனைத்துப் பாவங்களையும் சுமக்கும் பொருட்டு யோவான் ஸ்நானனால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, அவரின் இரட்சிப்பின் நற்செய்தியை விசுவாசிப்பவர்களான நம்மை இரட்சித்தார். ஆனால் அவர் மூலப்பாவத்தை மட்டும் தான் எடுத்துப்போட்டார் இல்லையா?' என்று எண்ணும் மக்கள் இருக்கிறார்கள். அது தவறு.

அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரே தரம் சுமந்தார் என்று வேதாகமத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூலப் பாவங்கள் உட்பட நம்முடைய எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டன. மத்தேயு 3:15இல் எழுதப்பட்டுள்ளது. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறதுஎல்லா நீதியையும் என்பதின் பொருள், எந்த விலக்குமில்லாமல் எல்லாப் பாவங்களும் நம்மிடமிருந்து அகற்றப்பட்டன.

நாம் வாழ்நாள் முழுவதும் செய்யும் பாவங்களையும் இயேசு கழுவி விட்டாரா? ஆம் கழுவிவிட்டார். அதற்கான அத்தாட்சியை லேவியராகமத்தில் காண்போம். அது தலைமை ஆசாரியனைக் குறித்தும் பாவ நிவாரண நாளின் பலியைக் குறித்தும் கூறுகிறது.

இஸ்ரவேலின் அனைத்து மக்களின் வருடப் பாவத்திற்கான பாவ நிவாரண பலி

  • இப்பூமியின் பாவ பலியின் மூலம் இஸ்ரவேல் மக்களால் பரிசுத்தமாக முடியுமா?
  • முடியவே முடியாது.

பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவிர்த்தி செய்யும்படிக்கும், தன்னுடைய பாவநிவாரண பலியின் காளையைச் சேரப்பண்ணி, அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டு வந்து, ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையுங் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக் கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவைப் பாவநிவாரண பலியாகச் சேரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை, அதைக் கொண்டு பாவ நிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போக விடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி (லேவியராகமம் 16:6-10). இங்கு ஆசரிப்புக் கூடார வாசலில் ஆரோன் இரண்டு ஆடுகளை இஸ்ரவேலின் வருடப் பாவத்திற்கு நிவாரணம் செய்யும்படி எடுத்தான்.

அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையுங் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக் கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டுபாவ நிவிர்த்திக்கு போக்காடு ஒன்று தேவைப்பட்டது.

ஒரு பாவி தன் பாவத்தை பலியின் மீது சுமத்த தன் கையை பலியின் தலை மீது வைப்பது தினப் பாவத்திற்கான பாவ நிவாரணப் பலியாகும். ஆனால் தலைமை ஆசாரியன் அனைத்து மக்களின் சார்பாக, மக்களின் வருடாந்தர பாவத்தை ஒவ்வொரு வருடத்தின் ஏழாம் மாதம் பத்தாம் திகதியில் பாவ பலியின் மீது சுமத்தினான்.

லேவியராகமம் 16:29-31இல் எழுதப்பட்டுள்ளது. ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்துவதுமின்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக் கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவ நிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக் கடவீர்கள்; இது நித்திய கட்டளை.

பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் மக்கள் அன்றாடப் பாவங்களுக்கு நிவிர்த்தி செய்யவும் தம் பாவங்களை அதன் தலைமீது சுமத்தும்படியும் ஒரு பாவ பலியை எடுத்து வந்து கர்த்தரே, கர்த்தரே நான் இத்தகையப் பாவங்களைச் செய்தேன். தயவு செய்து என்னை மன்னியும்என்று கூறி அதன் தலை மீது செலுத்தினார்கள். பிறகு அவன் அந்த பாவ பலியின் கழுத்தை வெட்டி, இரத்தத்தை ஆசாரியனிடம் கொடுத்து விட்டு, தான் இப்போது பாவங்களில்லாதவன் என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்குச் சென்றான். பாவ பலியானது தனது தலையிலுள்ள பாவத்துடன் பாவிக்காக மரித்தது. அவனுக்கு பதிலாக அப்பாவ பலி கொல்லப்பட்டது. பழைய ஏற்பாட்டில் பாவ பலியானது ஆடாகவோ, மாட்டுக்குட்டியாகவோ, காளையாகவோ இருக்கலாம். கர்த்தர் எல்லா பரிசுத்தமான விலங்குகளையும் பிரித்து வைத்திருந்தார்.

ஒரு பாவி தன் பாவங்களுக்கு மரிப்பதற்கு பதிலாக, கர்த்தர் தம் அளவற்ற கிருபையின் மூலம், ஒரு விலங்கின் உயிரைக் காணிக்கையாக கொடுப்பதை அனுமதித்தார்.

பழைய ஏற்பாட்டில், இவ்விதமாக பாவ நிவாரணப் பலியின் மூலமாக பாவிகளால் தம் பாவங்களை நிவர்த்திச் செய்ய முடிந்தது. பாவியின் அத்து மீறல்கள் கை வைப்பதன் மூலம் பாவ பலியின் மீது சுமத்தப்பட்டு, பாவியின் பாவங்களை அழிக்கும் பொருட்டு அதன் இரத்தம் ஆசாரியனிடம் கொடுக்கப்பட்டது.

ஆயினும் ஒவ்வொரு நாளும் பாவ நிவர்த்தி செய்வது இயலாத ஒன்றாயிருந்தது. ஆகவே ஒவ்வொரு வருடத்தின் ஏழாம் மாதம் பத்தாம் திகதியில், அனைத்து இஸ்ரவேல் மக்களின் சார்பாக அவ்வருடத்தின் பாவத்தைத் தலைமை ஆசாரியன் கழுவும்படி அவனுக்கு அனுமதியளித்தார்.

பாவ நிவாரண நாளில் தலைமை ஆசாரியனின் வேலை என்னவாயிருந்தது? முதலில் தலைமை ஆசாரியன் தன் கைகளை பலியின் மீது வைத்து, மக்களின் பாவங்களை அறிக்கையிட்டான். கர்த்தரே, இஸ்ரவேல் மக்கள் இன்ன இன்ன பாவங்களைச் செய்தனர், கொலை, விபசாரம், காமவிகாரம், களவு, பொய்சாட்சி, தேவதூஷனம்ஸ

பிறகு பாவ பலியின் கழுத்தை அவன் வெட்டி, இரத்தத்தை எடுத்து, பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே இருக்கும் கிருபாசனத்தின் மீது ஏழு முறை தெளித்தான். (வேதாகமத்தில் 7ஆம் எண் நிறைவான எண்ணாக கருதப்படுகிறது.)

அனைத்து மக்களின் சார்பாக, அவர்களின் வருடப் பாவங்களை பாவ பலியின் தலைமீது சுமத்துவது அவனுடைய கடமையாக இருந்தது. அம்மக்களின் இடத்தில் அப்பாவப்பலி பலியாகக் கொடுக்கப்பட்டது.

கர்த்தர் நீதிமானாயிருக்கிறபடியால், அவர் எல்லா மக்களையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படி மக்களினிடத்திலிருந்து பாவபலி மரிப்பதை அவர் அனுமதித்தார். கர்த்தர் உண்மையாகவே கிருபை நிறைந்தவராக இருப்பதினாலே, அவர்கள் தமக்கு பதிலாக பாவப்பலியைப் பலியாகக் கொடுக்க அனுமதித்தார். பின்னர் தலைமை ஆசாரியன் கிருபாசனத்தின் கிழக்குப் பக்கத்தில் இரத்தத்தைத் தெளித்து, மக்களின் கடந்த வருடத்தின் எல்லாப் பாவங்களையும், ஏழாம் மாதம் பத்தாம் திகதியில் வரும் பாவ நிவாரணத் தினத்தில், அவர்களின் எல்லாப் பாவங்களுக்கும் பிரயச்சித்தம் செய்தான்.

  • பழைய ஏற்பாட்டின் பலியாட்டுக்குட்டி யார்?
  • களங்கமெதுவுமில்லாத இயேசுவே.

பாவமன்னிப்புத் தினத்தில் இஸ்ரவேல் மக்களுக்காக தலைமை ஆசாரியன் இரண்டு ஆடுகளைப் பலிகொடுக்க வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றை போக்காடு என்றழைத்தனர். அதன் பொருள் வெளியே போடுவது' என்பதாகும். புதிய ஏற்பாட்டின் இயேசுகிறிஸ்து போக்காட்டிற்கு ஒப்பனையானவராய் இருக்கிறார். தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை பலி ஆட்டுக்குட்டியாகக் கொடுத்தார். எல்லா மனிதர்களின் பலி ஆட்டுக் குட்டியாகிய அவர், யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு உலகின் இரட்சகரும் மேசியாவுமானார். மேசியா என்பதன் பொருள் இரட்சகர்' என்றும் இயேசுகிறிஸ்து என்பதன் பொருள் நம்மை இரட்சிக்க வந்த இராஜா' என்பதுமாகும்.

ஆகவே, பழைய ஏற்பாட்டின் பாவ நிவாரணத்தினத்தன்று எப்படி மக்களின் வருடாந்திரப் பாவங்கள் அகற்றப்பட்டனவோ அது போல ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு, இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரிக்கும்வரை இரத்தம் சிந்தி நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான பாவ நிவாரண நற்செய்தியை முழுமைப்படுத்தினார்.

இவ்வேளையில் லேவியராகமத்தில் இருந்து ஒரு பந்தியை வாசிப்போம். அதின் தலைமேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக் கடவன். அந்த வெள்ளாட்டுக் கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன் மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போக விடக்கடவன்” (லேவியராகமம் 16:21-22).

லேவியராகமம் 1 ஆம் அதிகாரத்தில் கூறப் பட்டுள்ளது போல் இங்கு எல்லா மனிதர்களின் பாவங்களும் ஆட்டின் தலைமீது சுமத்தப்பட்டதாக எழுதப் பட்டுள்ளது. அவர்களின் அக்கிரமங்களையெல்லாம்' என்பதன் பொருள், அவர்கள் தம் இருதயத்தில் செய்த அனைத்துப் பாவங்களும், அவர்கள் தம் மாமிசத்தினாலே செய்த அனைத்துப் பாவங்களுமாகும். அவர்களின் அக்கிரமங்களெல்லாம்' கை வைப்பதன் மூலம் பாவ பலியின் தலையின் மீது சுமத்தப்பட்டது.

நியாயப் பிரமாணத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் குறித்த உண்மையான அறிவைப் பெறுகிறோம்.

  • கர்த்தர் நமக்கேன் சட்டத்தைக் கொடுத்தார்?
  • நமக்கு பாவத்தைக் குறித்து அறிவூட்டவே.

கர்த்தரின் நியாயப் பிரமாணத்தில் 613பிரிவுகள் உள்ளன. அதனை நினைத்துப் பார்த்தால், இதில் எதைச் செய்யக் கூடாது என்று அவர் கூறியிருக்கிறாரோ அதைச் செய்தும் எதைச் செய் என்றாரோ அதனைச் செய்யாமலும் இருக்கிறோம்.

ஆகவே நாம் பாவிகள். நாம் நம் பாவங்களைக் குறித்து அறிந்து கொள்ளவே கர்த்தர் நமக்குச் சட்டத்தைக் கொடுத்தார் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது (ரோமர் 3:20). இதன் பொருள் நாம் பாவிகள் என்று நமக்கு கற்றுக்கொடுக்கவே அவரின் சட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் நமக்கு கொடுத்தார். நாம் அவற்றின் படி வாழ முடியும் என்பதற்காக அல்ல. நம் பாவங்களைக் குறித்து நாம் அறிந்து கொள்ளவே அவற்றைக் கொடுத்தார்.

நாம் அவரின் சட்டத்தையும் கட்டளைகளையும் பின்பற்றுவதற்காக அவர் அவற்றை நமக்கு கொடுக்கவில்லை. மனிதர்களைப் போல் ஒரு நாய் வாழ வேண்டும் என்று உங்களால் எதிர்ப்பார்க்க முடியுமா? அது போலவே, நாம் கர்த்தரின் சட்டத்தின் படி வாழ முடியாது. ஆனால் அவரின் சட்டம் மற்றும் கட்டளைகளினால் நம் பாவங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நாம் பாவக்குவியலாக இருப்பதாலும் அவற்றை நாம் புரிந்துகொள்ளாததாலுமே கர்த்தர் அவற்றை நமக்குக் கொடுத்தார். நீங்கள் கொலைபாதகர், விபசாரிகள், தீமைச்செய்பவர்கள்அவர் நம்மை கொலை செய்யாதிருப்பாயாக என்றாலும் நம்மிருதயத்தில் சில சமயங்களில் உண்மையாக கொலை செய்கிறோம்.

ஆயினும் சட்டத்தில் நாம் கொலை செய்யக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளதால் நாம் கொலையாளிகள் என்று நமக்குத் தெரியும். , நான் தவறு செய்தேன். நான் செய்யக்கூடாததைச் செய்ததால் பாவியானேன். நான் பாவம் செய்தேன்என்று கூறுகிறோம்.

ஆகவே இஸ்ரவேல் மக்களை பாவத்திலிருந்து இரட்சிக்க பழைய ஏற்பாட்டில் பாவ நிவாரண பலியை காணிக்கையாக்க கர்த்தர் ஆரோனை அனுமதித்தார். வருடத்தில் ஒரு முறை ஆரோன் மக்களுக்காக பாவ நிவர்த்தி செய்தான்.

பழைய ஏற்பாட்டில், பாவ நிவிர்த்தி தினத்தன்று இரண்டு பாவ பலிகளைச் செலுத்த வேண்டும், ஒன்று கர்த்தருக்கு முன்பாக பலியிடப்பட்டது, மற்றது கைவைக்கப்பட்டதால், மக்களின் வருடப் பாவங்களை எல்லாம் தன் மீது சுமந்து கொண்டபிறகு வனாந்திரத்திற்குள் அனுப்பப்பட்டது. பொருத்தமான ஒருவனின் மூலம் அந்த ஆடு வனாந்தரத்திற்குள் அனுப்பப் படுவதற்கு முன், தலைமை ஆசாரியன் தன் கைகளை உயிருள்ள ஆட்டின் தலைமீது வைத்து இஸ்ரவேலின் பாவங்களை அறிக்கைச் செய்தான். கர்த்தரே, மக்கள் கொலைச் செய்தனர், விபசாரம் செய்தனர், திருடினர், விக்கிரகாராதனைச் செய்தனர். நாம் பாவஞ்செய்தோம்.

பாலஸ்தீன நாடானது மணலாலும் பாலை வனத்தினாலுமான வனாந்திரமாகும். போக்காடானது முடிவில்லாத வனாந்தரத்திற்குள் அனுப்பப்பட்டு இறந்தது. அது அனுப்பப்படுவதை இஸ்ரவேல் மக்கள் கண்டபோது அவர்கள் தம் பாவங்கள் அகற்றப்பட்டதை விசுவாசித்தனர். மக்கள் மன அமைதி பெற்றனர். போக்காடானது எல்லா மக்களின் வருடப் பாவங்களுக்காக வனாந்திரத்தில் மரித்தது.

தேவாட்டுக்குட்டியான இயேசுகிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நம் எல்லாப் பாவங்களுக்கும் பாவ நிவிர்த்திச் செய்தார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் முற்றிலுமாக கழுவப்பட்டது.

இயேசு நம் கர்த்தரும் இரட்சகருமானவர். தேவகுமாரனாகிய அவர் பாவத்திலிருந்து மனிதகுலத்தை இரட்சிக்கும் படி வந்தார். அவர் சாயலாக நம்மைப் படைத்த அவரே படைப்பாளி. அவர் நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இவ்வுலகிற்கு இறங்கி வந்தார்.

நம்முடைய சரீரத்தினால் செய்யும் தினப்பாவங்கள் மட்டுமின்றி நம் எதிர்காலப் பாவங்கள் நம் மனதிலுள்ள பாவங்கள், நம் சரீரத்தின் பாவங்கள் யாவும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. உலகின் எல்லாப் பாவங்களுக்குமான முழுமையான பாவநிவர்த்தியாகவும் கர்த்தரின் எல்லா நீதிகளும் நிறைவேற்றப்படும் படியாகவும் அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது.

இயேசு சிலுவையிலறையப்படுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், அவர் தம் பொது ஊழியத்தைத் தொடங்கியபோது, யோவான் ஸ்நானனால் யோர்தானில் அவர் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். நம் எல்லாப் பாவங்களுக்குமான அவரின் பாவநிவிர்த்தியின் மூலம் மனிதர்களை இரட்சிப்பது அவர் ஞானஸ்நானத்திலிருந்து தொடங்கியது.

இடுப்புவரை ஆழமுள்ள யோர்தான் நதியின் ஔரிடத்தில், யோவான் ஸ்நானன் இயேசுவின் தலை மீது தன் கைகளை வைத்து அவரைத் தண்ணீரில் அமிழ்த்தினான். இந்த ஞானஸ்நானமானது பழைய ஏற்பாட்டின் கை வைப்பதற்கு ஒப்பானதும் பாவ மன்னிப்பை சுமத்தும் அதே விளைவை ஏற்படுத்துவதுமாயிருந்தது.

நீரில் அமிழ்த்தப்படுவது மரணத்தையும் நீரிலிருந்து வெளியே வருவது உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. இப்படி யோவான் ஸ்நானனால் அவர் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் இயேசு அதனை நிறைவேற்றியதுடன் மூன்று காரியங்களையும் வெளிப்படுத்தினார். எல்லாப் பாவங்களையும் சுமப்பது, சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிரோடெழும்புதல்.

எந்த வார்த்தைகளின் மூலம் இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சித்தாரோ அதற்கு கீழ்ப்படிவதன் மூலமே நாம் இரட்சிக்கப்படுவோம். கர்த்தர் இயேசுவின் மூலம் நம்மை இரட்சிக்க தீர்மானித்தார். இப்படியாக அவர் பழைய ஏற்பாட்டில் செய்த உடன்படிக்கை நிறைவேறியது. இயேசு நம்மனைவரின் எல்லாப் பாவங்களையும் தம் தலையில் சுமந்து சிலுவையை நோக்கி நடந்தார்.

  • இயேசு நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்ட பிறகு நமக்கு விடப்பட்ட வேலை என்ன?
  • நாம் கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவேண்டும்.

யோவான் 1:29 இல் எழுதப்பட்டுள்ளது, மறு நாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.யோவான் ஸ்நானன் சாட்சி பகன்றான், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஇயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது மனிதர்களின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. இதனை விசுவாசி! உன் வாழ்நாள் முழுவதும் இந்த பாவ நிவிர்த்தியால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

கர்த்தரின் வார்த்தைகளின் மீது நமக்கு விசுவாசமிருக்கவேண்டும். நம்முடைய சொந்த சிந்தனைகளையும் அடம்பிடிப்பதையும், புறம்பேத் தள்ளிவிட்டு உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுகிறிஸ்து சுமந்தார் என்ற உண்மையை நாம் விசுவாசிக்க வேண்டும். மேலும் எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவேண்டும்.

இயேசு இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்று கூறுவதும், நம் பாவங்களுக்கு நிவிர்த்தி செய்தமையால் கர்த்தரின் எல்லா நீதியையும் முழுமையாக்கினார் என்று கூறுவதும் ஒன்றே. மேலும் கை வைப்பது' என்பதும் ஞானஸ்நானம்' என்பதும் ஒன்றே.

எல்லாம்', ‘அனைத்தும்' அல்லது முழுவதும்' என்று எதனைக் கூறினாலும் அதன் பொருள் ஒன்றே. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கை வைத்தல்' என்ற சொல் புதிய ஏற்பாட்டிலும் கூட அதே பொருளைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஞானஸ்நானம்' என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அது இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார் என்றும் சிலுவையில் நம்முடையப் எல்லாப் பாவங்களையும் நிவிர்த்தி செய்யும் பொருட்டு தீர்க்கப்பட்டார் என்பதும் உண்மையாக வருகிறது. இந்த மூல நற்செய்தியை நாம் விசுவாசிக்கும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என்று நாம் கூறும்பொழுது, உலகின் எல்லாப் பாவங்களையும் என்று நாம் கூறுவதின் பொருள் யாது? நாம் பிறக்கும்போது நம்மிடம் உள்ளப் பாவங்களையும் தீய சிந்தனைகளையும், களவையும், விபசாரத்தையும், பேராசையையும், துன்மார்க்கத்தையும், தேவ தூஷனத்தையும், பெருமையையும் நம் மனதில் சஞ்சரிக்கும் முட்டாள்தனத்தையும் நாம் குறிப்பிடுகிறோம். இதன் பொருளானது நம் மாமிசத்திலும் இருதயத்திலுமுள்ள அக்கிரமங்களும் மீறுதல்களுமாகும்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23) “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22).இவ்வசனங்களில் காணப்படுவது போல் எல்லாப் பாவங்களுக்கும் கிரயம் செலுத்த வேண்டும். ஆகவே, இயேசுகிறிஸ்து, எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக, தம் வாழ்வையே கொடுத்து ஒரேதரம் நமக்காகப் பாவங்களுக்கு கூலியைச் செலுத்தினார்.

ஆகவே, நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக செய்ய வேண்டியதெல்லாம், மூல நற்செய்தியான இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும், இயேசு நம் தேவனாக இருக்கிறார் என்றும் அவர் நம் இரட்சகர் என்பதையும் விசுவாசிப்பதே.

நாளையப் பாவங்களுக்கான பிரயச் சித்தம்

  • நம்முடைய பாவங்களுக்காக நாம் இன்னமும் கூலி கொடுக்க வேண்டுமா?
  • எப்பொழுதும் இல்லை.

இன்றைய பாவங்களும், நேற்றைய பாவங்களும் அதற்கு முந்தின நாளின் பாவங்களும் உலகின் பாவங்களில்' அடங்கியிருப்பது போன்று நாளையப் பாவங்களும், நாளை மறுநாளின் பாவங்களும் நாம் மரிக்கும் வரைச் செய்யும் பாவங்களும் உலகின் பாவங்களில்' அடங்கியிருக்கிறது. உலகின் பாவங்களில்' மக்கள் தம் பிறப்பிலிருந்து இறப்பு வரைச் செய்வது பாவங்களின் ஒரு பாகமாகும், இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. ஆகவே நாம் மரிக்கும் நாள் வரை நாம் செய்யப்போகும் எல்லாப் பாவங்களும் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டன.

கர்த்தரின் எழுதப்பட்ட வார்த்தைகளான இந்த மூல நற்செய்தியை மட்டுமே நாம் விசுவாசித்து, இரட்சிக்கப்படும்படியாக அதற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். நம்முடைய எல்லாப் பாவங்களிலுமிருந்து நாம் விடுதலையாக நம் சொந்த சிந்தனைகளை புறம்பேத்தள்ளிவிட வேண்டும். நாம் செய்யாத பாவத்தைக் கூட அவரால் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் உங்களிடம் கேட்கிறேன். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்த வேண்டுமா?”

மறுபடியும் பிறக்கும் நற்செய்தியில் பாவநிவிர்த்திக்கான கட்டளையுமிருக்கிறது. இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபிரெயர் 9:22). ஒருவன் தன் பாவங்களிலிருந்து விடுதலையாக வேண்டுமானால், பாவ பலியின் மீது தன் கைகளை வைத்து அவன் பாவங்களை அதன் மீது சுமத்த வேண்டும். மேலும் பாவ பலியானது அவன் பாவங்களுக்காக மரிக்க வேண்டியதாயிருந்தது.

அதுபோலவே, தேவகுமாரன் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க இவ்வுலகிற்கு இறங்கி வந்தார். அவர் நம் எல்லாப் பாவங்களையும் சுமக்க ஞானஸ்நானம் பெற்று நம் பாவங்களுக்கு கூலியாக சிலுவையில் இரத்தம் சிந்தி முடிந்ததுஎன்று கூறி சிலுவையில் மரித்தார். அவர் 3ஆம் நாளிலே மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து இப்பொழுது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் என்றென்றும் நம் இரட்சகரானார்.

நம்முடைய பாவங்களுக்கு முழுமையாக கிரயஞ்செலுத்த, நம்முடைய நிலையான யோசனைகளைத் தூக்கி எறிவதுடன், நம்முடைய அன்றாடப் பாவங்களிலிருந்து தினமும் நாம் விடுதலை பெறவேண்டும் என்ற மத நம்பிக்கையையும் விட்டுவிடவேண்டும். மனிதர்களில் பாவங்களை அழிக்க ஒரேதரமாக ஒரு பலி உருவாக்கப்படவேண்டியிருந்தது. பரலோகத்தின் தேவன் தம் சொந்த குமாரனின் மீது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமத்தி நமக்காக அவரை சிலுவையில் அறைந்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததன் மூலம், நம் இரட்சிப்பு முழுமை ஆயிற்று.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை எற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப் பட்டவரென்று எண்ணினோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.ஏசாயா 53உலகின் மற்றும் அனைத்து மக்களின் அக்கிரமங்களையும் மீறுதல்களையும் கர்த்தர் இயேசுகிறிஸ்துவின் மீது சுமத்தியதாக கூறுகிறது.

புதிய ஏற்பாட்டின், எபேசியர் 1:4இல் எழுதப்பட்டுள்ளது. அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே.இதன் பொருள் உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர் நம்மை அவரில் தெரிந்துக் கொண்டார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே கர்த்தர் நம்மை அவர் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவுக்குள் களங்கமற்ற நீதிமான்களாகவும் தேர்ந்தெடுத்தார். நாம் முன்பு எதை நினைத்திருந்தாலும் இப்போது நீர், இரத்தம், மற்றும் ஆவி ஆகிய கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து இப்போது அவற்றை விசுவாசிக்கவேண்டும்.

கர்த்தரின் ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து எல்லா மனிதர்களுக்கும் பாவ நிவிர்த்தி செய்தார் என்று கர்த்தர் நம்மிடம் கூறினார். எபிரெயர் 16இல் எழுதப்பட்டுள்ளது. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரே விதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது (எபிரெயர் 10:1).

ஒரே விதமான பலிகளை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செலுத்துவது நம்மை முழுமையாக்காது என்று இங்கே இது கூறுகிறது. சட்டமானது வரப்போகிறவைகளின் நன்மையாக இருக்கிறது, அது அவைகளின் உருவமல்ல. வரப்போகிறவராகிய மேசியாவாகிய இயேசுகிறிஸ்து ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவையிலறையப்பட்டதன் மூலமும் (இஸ்ரவேலரின் வருடாந்திரப் பாவங்கள் ஒரே தரமாக நிவிர்த்திக்கப்பட்டது போல்) நம்மை ஒரே தரம் முழுமையாக்கினார்.

ஆகவே இயேசு எபிரெயர் 10இல் கூறினார், “தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும் எந்த ஆசாரியனும் நாடோரும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒரு காலும் நிவர்த்திச் செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். இதைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சி சொல்லுகிறார்; எப்படியெனில்; அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது; நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்த பின்பு, அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே (எபிரெயர் 10:9-18).

அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசு நம்மை இரட்சித்தார் என்று விசுவாசிக்கவேண்டும்.

நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்த இரட்சிப்பானது நம்மிருதயத்திலும் மனதிலும் எழுதப்பட்டுள்ளது

  • நாம் இனிமேல் பாவஞ் செய்யாததினால் நீதிமானா?
  • இல்லை.  இயேசு நம் எல்லாப் பாவங்களையும், நாம் அவரை விசுவாசிப்பதாலும் நாம் நீதிமான் ஆனோம்.

நீங்களனைவரும் விசுவாசிக்கிறீர்களா? - ஆமேன் - நம்மை இரட்சிக்கும்படியாக இயேசுகிறிஸ்துவே ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தார் என்ற கர்த்தரின் வார்த்தைகளுக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிகிறீர்களா? மறுபடியும் பிறக்க வேண்டுமானால் நாம் கீழ்ப்படிந்தேயாகவேண்டும். கிரயம் செலுத்திய நற்செய்தியினால் இயேசுகிறிஸ்து நம் எல்லாப் பாவங்களையும், உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப் போட்டார் என்று நாம் விசுவாசிக்கும்போது இரட்சிக்கப்படுவோம்.

கர்த்தரின் சட்டத்திற்கு கீழ்ப்படிவதினால் நம்மால் முழுமையாக முடியாது, ஆனால் கர்த்தரி செய்கைகளின் மீதுள்ள நம் விசுவாசத்தினால் நம்மால் முழுமையாக முடியும். இயேசுகிறிஸ்து தம் யோர்தானின் ஞானஸ்நானம் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் எற்றுக்கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையின் தீர்ப்பைப் பெற்று தண்டிக்கப்பட்டார். நம்முடைய முழு இருதயத்தோடும் இந்நற்செய்தியை விசுவாசித்து நம் பாவங்களிலிருந்து விடுதலையாகி நீதிமானாக முடியும். இதனை நீ விசுவாசிக்கிறாயா?

இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவையிலறைப்பட்டது மற்றும் உயிரோடெழும்பியது ஆகியவை கர்த்தரின் எல்லையில்லா அன்பின் அடிப்படையில் அமைந்த இரட்சிப்பின் சட்டத்திற்கும் நம் எல்லாப் பாவங்களுக்குமான பாவகிரயமுமாகும். நாமிருக்கும் நிலையிலே அவர் நம்மை நேசிப்பதாலும், அவர் நீதிபரராயிருப்பதினாலும், நம்மை முதலில் நீதிமானாக்கினார். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியதன் மூலம் நம்மை நீதிமானாக்கினார்.

நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவும்படி அவர் தம் ஒரே குமாரனாகிய இயேசுவை நமக்காக இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்க இயேசுவை அனுமதித்து நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான தீர்ப்பையும் அவர் தன் மகனிற்கு அளித்தார். நீர் மற்றும் இரத்தத்தின் இரட்சிப்பின் மூலமாக அவர் நம்மைத் தமது நீதியின் பிள்ளைகளாக்கியது, கர்த்தரின் பேராச்சர்யமளிக்கும் செய்கையாகும்.

எபிரெயர் 10:16இல் எழுதப்பட்டுள்ளது. நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்.

நம்முடைய இருதயத்திலும் மனதிலும், கர்த்தருக்கு முன்பு நாம் பாவிகளா அல்லது நீதிமான்களா? கர்த்தருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் நாம் நீதிமான்களாவோம். இயேசுகிறிஸ்து நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து அவற்றிற்கான தீர்ப்பையும் பெற்றார். இயேசுகிறிஸ்துவே நம் இரட்சகர். நாம் தினமும் பாவஞ்செய்கையில் நாம் எப்படி நீதிமான்களாக இருக்கமுடியும்? நாம் நிச்சயமாக பாவிகளேஎன்று நாம் எண்ணலாம். கிறிஸ்து இயேசு பிதாவிற்கு கீழ்ப்படிந்ததைப் போன்று நாமும் கர்த்தரின் வாத்தைகளுக்கு கீழ்ப்படிந்தால் நீதிமான் ஆவோம்.

நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு நம்மிருதயத்தில் பாவங்களிருந்தன, என்று முன்பு கூறியிருக்கிறேன். பாவக்கிரய நற்செய்தியை நம்மிருதயங்களில் பெற்றுக்கொண்ட பிறகு, நாம் நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோம். நற்செய்தியை நாம் அறியாதபோது நாம் பாவிகளே. இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிக்கத் தொடங்கிய பிறகு நாம் நீதிமான்களானதுடன், கர்த்தருடையன் நீதியின் பிள்ளைகளானோம். அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய நீதிமானாவதற்குரிய விசுவாசம் இதுவே. பாவக்கிரய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசம் நம்மை நீதிமான்' ஆக்கியது.

அப்போஸ்தலனாகிய பவுலோ இல்லை ஆபிரகாமோ அல்லது விசுவாசத்தின் மூதாதையர்களோ தம் செய்கைகளினால் நீதிமான்களாகவில்லை மாறாக கர்த்தரின் வார்த்தைகளான ஆசீர்வாத வார்த்தைகளை விசுவாசித்து அவற்றிற்கு கீழ்ப்படிந்தமையால் நீதிமான்களாயினர்.

எபிரெயர் 10:18இல் இவைகள் மன்னிக்கப் பட்டதுண்டானால், இனிப்பாவத்தினிமித்தம் பலி செலுத்தப் படுவதில்லையே.என்று எழுதப்பட்டுள்ளது போல், கர்த்தர் நம்மை இரட்சித்தபடியால் நமது பாவங்களுக்காக நாம் மரிக்க வேண்டியதில்லை. இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? - ஆமேன் -

பிலிப்பியர் 2இல் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:5-11)

இயேசுகிறிஸ்து அவருடைய மகிமையின் பிரகாசமாகவும் தன்னுடைய தன்மையின் உருவமாகவும் இருந்தாலும், (எபிரெயர் 1:3) தம்மை மிகப்பெரியவராகக் காட்ட முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் பணியாள் உருவத்தில் பணியாளாக உருவெடுத்ததுடன் மனிதர்களைப் போன்றே வந்தார். அவர் தம்மைத் தாழ்த்தி நம்மை இரட்சிப்பதற்காக தான் இறக்கும் நேரம் வரை கீழ்ப்படிந்தார்.

ஆகவே இயேசுவை அவர் நம் தேவன், இரட்சகரும் இராஜாவுமானவர்என்று புகழுவோமாக. நாம் கர்த்தரை மகிமைப் படுத்தி இயேசுவைப் புகழ்வதற்கான காரணம் அவர் தம் முடிவு வரை அவர் பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தமையே. அவர் கீழ்ப்படிந்திருக்காவிட்டால், தேவகுமாரனை நாம் மகிமைப் படுத்தமாட்டோம். ஆனால் தேவகுமாரன் தன் பிதாவின் சித்தத்திற்கு தன் மரணம் வரை கீழ்ப்படிந்ததால், படைக்கப்பட்டவைகளும் இப்பூமியிலுள்ள எல்லா மக்களும் அவரை மகிமைப்படுத்துவதுடன் நித்தியகாலமும் அப்படியே செய்வர்.

இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானார். அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் அவற்றை எடுத்துக்கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. நம் பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டு இப்பொழுது 2000ஆண்டுகளாகிவிட்டது. நீங்களும் நானும் பிறந்தது முதல் இவ்வுலகில் வாழுகிறோம். உலகின் பாவங்களில் நம்முடைய அனைத்துப் பாவங்களும் கூட அடங்கியுள்ளது.

  • நாளை நாம் பாவம் செய்தாலும் நாம் இப்போது பாவிகளா?
  • இல்லை.  ஏனெனில் இயேசு, இறந்த கால, நிகழ் கால, எதிர்கால பாவங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்தார்.

நம் வாழ்நாள் முழுவதும் செய்யும் நமது மீறுதல்களிலிருந்து மூலப் பாவத்தைப் பிரித்து விட்டால், நாம் பிறந்ததிலிருந்து எந்தப் பாவத்தையும் செய்ததில்லையா? - ஆம், நாம் பாவம் செய்தோம் -

இயேசுவிற்கு நாம் பிறந்த தினத்திலிருந்து மரிக்கும் வரை பாவம் செய்வோம் என்று தெரியுமாகையால் அவர் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்கெனவே சுமந்தார். இதனை இப்போது பார்க்கிறீர்களா? நாம் 70வயது வரை வாழ்ந்தால் நம் பாவங்கள் நூறு லாரிகளை நிரப்புவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால் அவரின் ஞானஸ்நானம் மூலம் இயேசுவானவர் எல்லோரின் பாவங்களையும் ஒரே தரமாக எடுத்துப்போட்டார். அவர் சிலுவைக்கு நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துச் சென்றார்.

இயேசு நம் மூலப்பாவத்தை மட்டுமே எடுத்துப்போட்டிருந்தால், நாம் மரித்து நரகத்திற்கு போவோம். அவர் நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போடவில்லை என்று நாம் உணர்ந்தாலும், அதனால் இயேசு நம் அனைத்துப் பாவங்களையும் துடைத்துப்போட்டார் என்பதை மாற்றமுடியாது.

இவ்வுலகில் நாம் எவ்வளவு பாவங்களைச் செய்வோம்?      இவ்வுலகின் பாவங்களில் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களும் அடங்கியுள்ளன.

இயேசு யோவானிடம் தனக்கு ஞானஸ்நானம் செய்யும் படி கூறியபோது அவரின் பொருள் இதுவே. நமது அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டதாக இயேசுவே தன்னைக் குறித்து சாட்சி கூறினார். கர்த்தர் தன் ஊழியனை இயேசு பிறப்பதற்கு முன்பு அனுப்பி அவனால் இயேசு ஞானஸ்நானம் பெறும்படி கூறினார். மனிதர்களின் பிரதிநிதியான யோவான் ஞானஸ்நானம் பெற்ற போது, ஞானஸ்நானம் பெறும் விதமாக அவன் முன்பு அவர் தலையைத் தாழ்த்தி, இயேசு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார்.

20இலிருந்து 30வரை, 30இலிருந்து 40வரையும் அதற்கு மேலும் நாம் செய்த எல்லாப் பாவங்களும் நம் பிள்ளைகளின் பாவங்களும் கூட இயேசுவானவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் எடுத்துப்போட்ட உலக பாவங்களில் அடங்கும்.

இவ்வுலகில் பாவங்களிலிருக்கிறது என்று கூறுவது யார்? இயேசுகிறிஸ்து உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துபோட்டார், இதனை நாம் நம்மிருதயங்களில், அவரின் ஞானஸ்நானம் மற்றும் விலையேறப்பட்ட இரத்தத்தை சிந்தியதன் மூலம் இயேசு நம் பாவங்களை நிவிர்த்தி செய்தார், என்று சந்தேகத்தின் நிழல் கூட இல்லாது விசுவாசிக்கும்போது, நாம் இரட்சிக்கப் படமுடியும்.

அநேக மக்கள் தம் சொந்த யோசனைகளினால் சுற்றப்பட்டு பயங்கரமான வாழ்க்கை வாழுகிறார்கள், அவர்கள் தம் வாழ்வு தான் எல்லாம் என்று தம் வாழ்வைக் குறித்து பேசுகிறார்கள். ஆனால் அநேகர் அதிக கடினமான வாழ்வை வாழ்ந்துள்ளனர். நான் உட்பட அநேகர் பயங்கரமான வாழ்வு வாழ்ந்தோம், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தமாகிய பாவக்கிரய நற்செய்தியை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளாமலோ ஏற்றுக்கொள்ளாமலோ இருக்க முடியும்?

 

பாவிகளின் இரட்சிப்பு நிறைவேற்றப்பட்டது



  • இயேசு ஏன் பேதுருவின் கால்களைக் கழுவினார்??
  • அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் அவர் ஏற்கெனவே அவனின் எல்லா எதிர்காலப் பாவங்களையும் கழுவிவிட்டார் என்று பேதுரு உறுதியாக விசுவாசிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

யோவான் 19 ஐ வாசிப்போமாக, அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரேயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்கு புறப்பட்டுப் போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டு பேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின் மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல் விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரேயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது” (யோவான் 19:17-20).

அன்புள்ள நண்பர்களே, இயேசுகிறிஸ்து உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, பிலாத்துவினிடத்தில் சிலுவையில் அறையப்படும்படி தண்டனை அளிக்கப்பட்டார். இந்த காட்சியை நாம் ஒன்றாக எண்ணுவோமாக.

28 ஆம் வசனமுதல், அதன் பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக:வேதவாக்கியங்களை நிறைவேற்றும் விதமாக இயேசு பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார். தாகமாயிருக்கிறேன் என்றார், காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப் பட்டிருந்தது;அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோபுத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக் கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:28-30).

முடிந்தது!என்று கூறி சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து அவர் உயிரோடெழுந்து பரலோகம் சென்றார்.

யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் தொடர்புள்ளவை, ஒன்றில்லாது மற்றதற்கு பயனில்லை. ஆகவே அவரின் பாவக்கிரய நற்செய்தி மூலம், நம்மை இரட்சித்த கர்த்தராகிய இயேசுவை நாம் புகழுவோமாக.

மனிதர்களின் மாமிசம் மாமிசத்தின் தேவைகளையே எப்பொழுதும் பின்பற்றுகிறது, நம் மாமிசத்தினால் பாவஞ்செய்வதைத் தவிர நம்மால் வேறெதுவும் செய்ய முடியாது. நம் மாமிசத்தின் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று தம் இரத்தத்தை அளித்தார்.

பெத்தலகேமில் பிறந்தவரும், யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றவரும், சிலுவையில் மரித்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடெழுந்தவருமான இயேசுவை எந்த நேரத்தில் விசுவாசித்தாலும், முழுப்பாவ பரிகாரமும் பெற்ற அவர்களால் பரலோக இராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும்.

யோவான் கடைசி அதிகாரத்தில், மரித்தோரிலிருந்து இயேசு மீண்டும் உயிரோடெழுந்த பிறகு கலிலேயாவிற்குச் சென்றார். அவர் பேதுருவிடம் சென்று கூறினார். யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” பேதுரு அவருக்கு பதில் கூறினான் ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்அப்பொழுது இயேசு அவனிடம் கூறினார் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக

பாவப் பரிகாரமாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தின் நற்செய்தி உட்பட பேதுரு அனைத்தையும் அறிவான். இப்பொழுது பாவக்கிரயமாகிய நற்செய்தியாகிய நீரையும் இரத்தத்தையும் அவன் விசுவாசித்ததோடு, இயேசு ஏன் அவனின் கால்களைக் கழுவினார் என்று உணர்ந்தபடியால், இயேசுவின் மீதுள்ள அவனின் விசுவாசம் மிகவும் உறுதியானது.

யோவான் 21:15 ஐ மீண்டும் வாசிப்போமாக, அவர்கள் போஜனம் பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, அவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.பேதுரு அவரின் சீடராயிருப்பதாலும், பேதுரு முற்றிலுமாக மீட்கப்பட்டதாலும், பேதுரு நீதிமானும் கர்த்தரின் சிறந்த ஊழியனுமானபடியாலும் இயேசு தம் ஆட்டுக்குட்டிகளை பேதுருவிடம் ஒப்படைத்தார்.

பேதுரு தன் அன்றாடப் பாவங்களினால் பாவியாகிப் போவானென்றால், பாவ நிவர்த்தி நற்செய்தியைப் பற்றி பிரசங்கிக்கும் படி இயேசு அவனிடம் கூறியிருக்க மாட்டார், ஏனெனில் அவனும், மற்ற சீடர்களும் மாமிசத்தினால் தினப்பாவங்களைச் செய்திருக்க முடியாது. இயேசு அவர்களின் பாவங்களைத் துடைத்துப் போட்ட நற்செய்தியை அவர்கள் பிரசங்கிக்கும் படி கூறியது ஏனெனில் பாவ நிவிர்த்தி நற்செய்தியான இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தை அவர்கள் விசுவாசித்துக் கொண்டிருந்தனர்.

ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்

  • நீ மறுபடியும்  பாவஞ்செய்தால் மீண்டும் ஒரு பாவியாகி' விடுவாயா?
  • இல்லை.  யோர்தானில் இயேசு ஏற்கெனவே உன் எதிர்காலப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார்.

இயேசு பேதுருவிடம் கூறிய வார்த்தைகளை எண்ணுவோமாக யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார் அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்அவனின் அன்பைக் குறித்த அறிக்கை உண்மையானது, அது பாவ நிவாரண நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து உருவானது.

அவர்கள் கால்களைக் கழுவியதன் மூலம் நற்செய்தியாகிய பாவக்கிரயம் செலுத்தியதை இயேசு பேதுருவுக்கும் மற்றச் சீடர்களுக்கும், போதித்திருக்காவிட்டால், அவர்களால் தம் அன்பை அந்தவிதமாக அறிக்கைச் செய்திருக்க முடியாது.

அப்படியில்லாமல், “இவற்றை விட என்னை அதிக நேசிக்கிறாயா?” என்று இயேசு அவர்களிடம் வந்து கேட்டிருந்தால் பேதுரு கூறியிருப்பான், “கர்த்தரே, நான் குறையுள்ளவனும் பாவியுமாவேன். நானொரு பாவியாதலால் இவைகளைவிட உம்மை அதிகமாக நேசிக்க முடியாது, தயவுசெய்து என்னை விட்டுவிடும்மேலும் பேதுரு ஓடிப்போய் இயேசுவிடமிருந்து தன்னை ஒளித்துக்கொண்டிருப்பான்.

பேதுருவின் பதில்களை எண்ணிப்பார்ப்போமாக. அவன் பாவக்கிரய நற்செய்தியினாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், எல்லா மனிதர்களையும் இரட்சித்த அவரின் இரத்தத்தினாலும் ஆசீர்வதிக்கப் பட்டிருந்தான்.

ஆகவே, அவன் கூறினான், “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்இந்த அன்பின் அறிக்கை அவர்களின், இயேசுவின் மன்னிப்பாகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தினால் வந்தது. பேதுரு உண்மை நற்செய்தியாகிய மன்னிப்பை விசுவாசித்தான். இதன் மூலம் இயேசுவானவர் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். அவர்களின் குறைவுகளினாலும் மாமிசத்தின் பலவீனத்தினாலும் மக்கள் பாவஞ்செய்யக் கட்டுப்பட்டிருப்பதால் அவர்கள் செய்யும் எதிர்காலப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார்.

பேதுரு பாவமன்னிப்பாகிய நற்செய்தியை உறுதியாக விசுவாசித்ததினாலும், இயேசுவே தேவ ஆட்டுக்குட்டியென அவன் விசுவாசித்ததினாலும், எந்தத் தடங்களுமின்றி அவனால் தேவனுக்கு பதிலளிக்க முடிந்தது. இயேசு அளிக்கும் இரட்சிப்பானது பாவ மன்னிப்பு நற்செய்தியின் மூலம் வந்தது, மேலும் அதனால் பேதுருவாலும் கூட அன்றாடப் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடிந்தது. உலகின் எல்லாப் பாவங்களுக்குமான பாவ மன்னிப்பின் நற்செய்தியின் மூலம் வரும் இரட்சிப்பை பேதுரு விசுவாசித்தான்.

பேதுருவின் உதாரணத்தைப் போன்றே நீங்களும் இருக்கிறீர்களா? அவரின் பாவ மன்னிப்பு நற்செய்தியினாலும், அவரின் ஞானஸ்நானத்தினாலும், அவரின் சொந்த இரத்தத்தினாலும் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்த இயேசுவை நேசித்து அவரை விசுவாசிப்பாயா? அவரை எப்படி நீ விசுவாசிக்காமலோ நேசிக்காமலோ இருக்க முடியும்? வேறு வழியில்லை.

   இயேசு இறந்த காலத்தின் அல்லது நிகழ்காலத்தின் பாவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு எதிர்காலப் பாவங்களை நம்மிடமே விட்டுவிட்டிருந்தால், இப்பொழுது நாம் அவரைப் புகழ்வது போல் புகழ்ந்து கொண்டிருக்க மாட்டோம். அதற்கு மேலும், நாம் நிச்சயமாக நரகத்திற்கே செல்வோம். ஆகவே, பாவ மன்னிப்பாகிய நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதை நாம் பகிரங்கமாகச் சொல்லவேண்டும்.

   மாமிசமானது பாவஞ்செய்ய விழையும், நாம் எல்லா நேரமும் பாவம் செய்கிறோம். ஆகவே இயேசு நமக்களித்த அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய நற்செய்தியாகிய அளவில்லாத பாவ நிவிர்த்தியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டோம் என்பதை அறிக்கை செய்யவேண்டும்.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய பாவ நிவிர்த்தியின் நற்செய்தியை நாம் விசுவாசிக்கவில்லையென்றால், எந்த விசுவாசியாலும் தம் வாழ்நாளின் அனைத்துப் பாவங்களிலும் இருந்து இரட்சிக்கப்பட முடியாது. மேலும், ஒவ்வொரு நேரத்திலும் நம் வாழ்நாளின் அனைத்துப் பாவங்களுக்காகவும் அறிக்கைச் செய்து மனம் வருந்திக் கொண்டிருந்து விடுதலைப் பெற்றுகொண்டிருந்தால் எந்நேரமும் நாம் நீதிமானாக இருப்பதற்கு அநேகமாக சோம்பேறிகளாயிருப்பதோடு நம்மிருதயத்தில் எப்பொழுதும் பாவங்களுடனிருந்திருப்போம்.

அப்படியானால், நாம் பாவியாக தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பதுடன், இயேசுவை நாம் நேசிக்கவோ அல்லது அவருக்கு நெருக்கமாவதோ முடியாததாகியிருக்கும். அப்பொழுது நம்மால் இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிக்க முடியாததுடன், நம் வாழ்வின் முடிவுவரை அவரை பின்பற்றவும் முடியாதிருந்திருக்கும்.

ஆயினும், இயேசு நமக்கு பாவமன்னிப்பின் நற்செய்தியை அளித்து, அதனை விசுவாசிப்போரை இரட்சித்தார். அவர் நம்முடைய முழு இரட்சகராகி நம் வாழ்வின் அனுதினமும் நாம் செய்யும் மீறுதல்களை கழுவிப் போட்டதால் நாம் அவரை உண்மையாகவே நேசிக்க முடிகிறது.

ஆகவே, பாவமன்னிப்பாகிய ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தத்தின் நற்செய்தியை, விசுவாசிகளாகிய நம்மால் விசுவாசித்திருக்கமுடியாது. இயேசு நமக்களித்த பாவமன்னிப்பு நற்செய்தியின் மூலம் இரட்சிப்பின் அன்பில் கட்டுண்டவர்களாவதுடன் எல்லா விசுவாசிகளாலும் இயேசுவை நித்தியமாக நேசிக்கவும் முடியும்.

அன்புள்ளவர்களே, இயேசு சிறிதளவு பாவத்தை விட்டு விட்டுச் சென்றிருந்தாலும், உங்களால் இயேசுவை விசுவாசிப்பதோ, பாவமன்னிப்பின் நற்செய்திக்கு சாட்சியாகவோ ஆகியிருக்க முடியாது. உன்னால் கர்த்தரின் ஊழியனாக சேவை செய்திருக்கவும் முடியாது.

ஆனால் நீ நற்செய்தியாகிய பாவமன்னிப்பை விசுவாசித்தாயானால், நீ உன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப் படுவாய். நீ இயேசுவின் வார்த்தைகளில் பதிவு செய்யப் பட்டிருக்கும் உண்மை நற்செய்தியாகிய பாவமன்னிப்பை அறிந்து கொள்ளும்போது உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீ இரட்சிக்கப் படுவாய்.

இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?

  • எதைவிடவும் இயேசுவை நாம் விசுவாசிக்கச் செய்வது எது?
    • நம் எதிகால பாவங்கள் உட்பட நம் அனைத்துப் பாவங்களையும் தம் ஞானஸ்நானத்தினால் கழுவிப்போட்ட நம்மீதுள்ள அவரின் அன்பு.

பாவமன்னிப்பு நற்செய்தியை விசுவாசிப்போராகிய தனது ஊழியர்களிடம் கர்த்தர் தம் ஆட்டுக்குட்டிகளை ஒப்புவித்தார். இயேசு யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று மூன்று முறை கேட்டார். ஒவ்வொரு முறையும் பேதுரு, “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்என்றான். பேதுருவின் பதில்களை இப்பொழுது எண்ணுவோமாக. அது அவனது சித்தத்தின் வாக்கியமாயில்லாது, உலகின் எல்லாப் பாவங்களுக்கு மான பாவ மன்னிப்பு நற்செய்தியின் மீதுள்ள அவன் விசுவாசமாயிருப்பதை நாம் காணலாம்.

நாம் ஒருவரை நேசிக்கும்போது, அந்த நேசமானது நமது சித்தத்திலிருந்து உருவானதாயிருந்தால், நாம் பலவீனமாக இருக்கும்போது அது உடைந்து போகலாம். ஆனால் அந்த அன்பானது அவன் அன்பின் உறுதியை சார்ந்திருந்தால் அது நித்தியமாயிருக்கும். கர்த்தரின் அன்பு என்ற நம் பாவங்களுக்கான அளவில்லாத பாவநிவிர்த்தி, மற்றும் இயேசுவின் ஞானஸ்நான நீர் மற்றும் ஆவியினால் வரும் இரட்சிப்பு ஆகியவை அத்தகையது.

உலகின் பாவங்களுக்கான பாவமன்னிப்பாகிய நற்செய்தியின் மீதுள்ள நம் விசுவாசம் கர்த்தருக்கு நாம் செய்யும் செய்கைகளின் அஸ்திவாரமானதோடு அது அவர்மேல் நாம் வைக்கும் அன்பாகவும் இருக்கிறது. நம்முடைய சித்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை நாம் நேசித்தால், நாளை கீழே தடுமாறி விழுந்து நம்முடைய அக்கிரமங்களினால் நம்மை வெறுப்பதில் முடிவோம். ஆயினும் இயேசு நம் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார்: மூலப்பாவம், இறந்தகாலத்தின் அன்றாடப் பாவங்கள், நாளைய பாவங்கள் மற்றும் நம் வாழ்வின் அனைத்துப் பாவங்களும் இதனில் அடங்கும். அவருடைய இரட்சிப்பிலிருந்து பூமியின் பரப்பிலிருக்கும் யாரையும் அவர் விட்டுவிடவில்லை.

இவையெல்லாம் உண்மையே. நம்முடைய அன்பும் விசுவாசமும் நம் சித்தத்தை சார்ந்திருந்தால், நம் விசுவாசத்தில் தவறி விடுவோம். ஆனால் நம் அன்பும் விசுவாசமும் இயேசு நமக்களித்த நற்செய்தியாகிய பாவமன்னிப்பில் சார்ந்திருப்பதால், நாம் ஏற்கெனவே கர்த்தரின் பிள்ளைகளாகவும் நீதிமான்களுமானோம். நாம் நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பை விசுவாசிப்பதால் பாவமில்லாதவர்களாக இருக்கிறோம்.

நம்முடைய இரட்சிப்பு, நம்மில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தினால் வராமல், கர்த்தரின் அன்பிலிருந்தும் நம் பாவங்களை மன்னித்ததன் மூலம் கிட்டும் உண்மை இரட்சிப்பின் சட்டத்தின் மூலமும் வருவதால், நாம் எத்தனைக் குறைவுள்ளவர்களாக, அல்லது உண்மை வாழ்க்கையில் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும் நாம் நீதிமான்களே. நாமெல்லாம் பரலோக இராஜ்யம் செல்வோம், மேலும் முடிவில் நித்தியமாக கர்த்தரைப் புகழுவோம். நீ இதனை விசுவாசிக்கிறாயா?

1யோவான் 4:10கூறுகிறது இந்த அன்புறவில் நீ அல்ல என்னை நேசித்தது, ஆனால் நானே உன்னை நேசித்தேன்.இயேசு நம்மை நீர் மற்றும் ஆவியினால் இரட்சித்தபடியால், பாவமன்னிப்பு நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மீது நமக்கு விசுவாசம் இருக்கவேண்டும்.

பாவ மன்னிப்பு நற்செய்தியின் மூலம் கர்த்தர் நம்மை இரட்சித்திருக்கவில்லையென்றால், நாம் எத்தனைத் தீவிரமாக விசுவாசித்தபோதிலும் நம்மால் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. ஆனால் நாம் நம் இருதயத்தினாலும் மாமிசத்தினாலும் செய்யும் அனைத்துப் பாவங்களையும் இயேசு கழுவிப்போட்டார்.

கர்த்தரை விசுவாசிப்பதற்கும், நாம் நீதிமான்கள் ஆவதற்கும், பாவமன்னிப்பு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தைகளில் விசுவாசம் வைப்பதன் மூலம் நம் இரட்சிப்பைக் குறித்து உறுதியாக இருக்க வேண்டும். நற்செய்தியாகிய உலகின் எல்லாப் பாவங்களுக்குமான மன்னிப்பானது, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தின் மீது விசுவாசம் வைப்பதில் இருக்கிறது. நற்செய்தியாகிய பாவமன்னிப்பு உண்மை நற்செய்தியாகும், இதுவே இரட்சிப்பின் அஸ்திவாரமும், கர்த்தருடைய நற்செய்தியின் திறவுகோலாகவும் இருக்கிறது.

நம் சொந்த சித்தத்தின் மீதுள்ள விசுவாசத்தைத் துண்டிக்க வேண்டும்

  • உண்மை விசுவாசம் எங்கிருந்து வருகின்றது?
  • எதிர்காலப் பாவங்களையும்  ஏற்கெனவே மன்னித்து விட்ட கர்த்தரின் அன்பிலிருந்து அது வருகிறது.

ஒருவனின் சொந்த சித்தத்தின் மூலம் வரும் விசுவாசமும் அன்பும், உண்மையான அன்போ அல்லது உண்மையான விசுவாசமோ அல்ல. தம்முடைய நல்சித்தத்தினால் முதலில் இயேசுவை விசுவாசிக்கும் இவ்வுலகத்தின் அநேகர் பேர், தம்மிருதயத்திலிள்ள பாவங்களினால் தம் விசுவாசத்தை முற்றிலுமாக விட்டுவிடுவர்.

ஆனால், இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டார் எனபதை நாம் அறியவேண்டும். முக்கியமில்லாத அக்கிரமங்களை மட்டுமல்ல, நம் அறிவீனத்தினால் நாம் செய்யும் மிகப்பெரும் பாவங்களையும் கழுவிவிட்டார்.

யோவான் 13 இல், அவருடைய இரட்சிப்பு எத்தகையது என்று தம் சீடர்களுக்குப் போதிப்பதற்காக, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கும் முன் தன் எல்லா சீடர்களையும் ஒன்று சேர்த்தார். அவர் தம் சீடர்களுடன் உணவருந்தும் முன் அவரின் இரட்சிப்பின் அம்சங்களைத் தெரியப்படுத்தும் விதமாக அவர்கள் கால்களைக் கழுவினார். இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவியதன் மூலம் அவர்களுக்கு போதித்த பாவமன்னிப்பு இரட்சிப்பை நாம் அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும்.

இயேசு அவன் கால்களை கழுவக் கூடாது என்று பேதுரு அடம்பிடித்தான். நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது!இது அவனுடைய சொந்த சித்தத்தினால் வந்த விசுவாசத்தின் வாக்கியமாகும். ஆனால் இயேசு கூறினார், “நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்

இப்பொழுது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் இயேசுவின் வார்த்தைகளை நாம் புரிந்து கொள்ளலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, பாவ மன்னிப்பாகவும் சத்திய வார்த்தைகளாயும் இருந்து, முழு மனதோடு அதனை விசுவாசிக்கும் பாவியை நீதிமானாக மாறுவதற்கு அனுமதிக்கிறது.

பேதுரு தன் சீடர்களுடன் மீன் பிடிக்கச் சென்றான். இயேசுவை சந்திப்பதற்கு முன் அவர்கள் செய்தது போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்கு முன் தோன்றி அவர்களை அழைத்தார். இயேசு அவர்களுக்கு காலை உணவைச் செய்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இயேசு கூறிய வார்த்தைகளின் பொருளை பேதுரு உணர்ந்தான். நான் செய்கிறது என்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்.இயேசு தன் கால்களை கழுவியதன் பொருள் என்ன என்று அவன் இறுதியாக அறிந்து கொண்டான்.

கர்த்தர் என் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார். நான் எதிர்காலத்தில் செய்யப் போகும் பாவங்கள் உட்பட, என் பலவீனத்தால் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் கழுவிவிட்டார்ஆகவே பேதுரு தன் சொந்த சித்தத்தினால் உருவான விசுவாசத்தை விட்டுவிட்டு பாவமன்னிப்பு நற்செய்தியாகிய ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிக்கத் தொடங்கினான்.

காலை உணவிற்கு பிறகு, இயேசு பேதுருவிடம் கேட்டார். இவர்களிலும் அதிகமாக நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயாஇப்பொழுது, இயேசுவின் அன்பின் மீதுள்ள விசுவாசத்தினால் உறுதி அடைந்த பேதுரு அறிக்கையிட்டான். ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்பேதுருவால் இப்படி கூற முடிந்தது ஏனெனில், “இனிமேல் அறிவாய்என்று இயேசு கூறியதன் பொருளை அவன் உணர்ந்திருந்தான். பாவமன்னிப்பு நற்செய்தியாகிய, ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் மீதுள்ள விசுவாசமாகிய அவனுடைய விசுவாசத்தை அறிக்கைச் செய்யமுடிந்தது.

பின்னால் அவன் கர்த்தரின் உண்மை ஊழியன் ஆனான்

ஆகவே, அதன் பிறகு, பேதுருவும் மற்ற சீடர்களும் தம் கடைசி நாள்வரை நற்செய்தியைப் பிரசங்கித்தனர். கிறிஸ்தவர்களை இரக்கமில்லாது துன்புறுத்திய பவுலும் கூட ரோம பேரரசின் கடினமான நாட்களில் நற்செய்தியைக் குறித்து சாட்சி கூறினான்.

  • நீ கர்த்தரின் உண்மை சேவகனாக ஆவது எப்படி?
  • அவர் செய்த உன்னுடைய பாவங்களுக்கான நிவிர்த்தியை விசுவாசிப்பதன் மூலம்.

இயேசுவின் பண்ணிரன்டு சீடர்களில் யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்து தனக்குத் தானே தூக்கு மாட்டிக்கொண்டான். அப்போஸ்தலனாகிய பவுல் அவனிடத்தைப் பிடித்தான். சீடர்கள் மாத்தியாவை தமக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் கர்த்தர் பவுலை தேர்ந்தெடுத்தார். பவுல் இயேசுவின் அப்போஸ்தனாகி பாவ மன்னிப்பின் நற்செய்தியை இயேசுவின் மற்ற சீடர்களுடன் சேர்ந்து பிரசங்கித்தான்.

இயேசுவின் அநேக சீடர்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். அவர்கள் மரித்துப் போகும்படியாக பயமுறுத்தப் பட்டாலும் அவர்கள் மூல நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்தனர்.

இயேசுகிறிஸ்து தம் நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினாலும், அவரின் நற்செய்தியாகிய பாவ மன்னிப்பின் மூலமும் உன் மாமிசத்தின் அனைத்துப் பாவங்களையும் கழுவினார். யோர்தானில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் உன் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டு உனக்காக சிலுவையில் நியாயம் தீர்க்கப்பட்டார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து இரட்சிக்கப்படு.

அநேகர் நற்செய்தியை கேட்டு விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டனர். அது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் மற்றும் ஆவியாகிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தின் வல்லமையாகும்.

சீடர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்தனர். இயேசுவே கர்த்தரும் இரட்சகருமானவர்அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து சாட்சி கூறியதால், நீங்களும் நானும் நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம், நற்செய்தியாகிய இரட்சிப்பை நம்மால் கேட்க முடிவதுடன், பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவும் முடிகிறது. கர்த்தரின் எல்லையில்லா அன்பினாலும் இயேசு அளித்த முழு இரட்சிப்பினாலும் நாமெல்லாரும் இயேசுவின் சீடர்களானோம்.

இதனை நீங்களெல்லாம் விசுவாசிக்கிறீர்களா? இயேசு நம்மை அதிகமாக நேசித்ததால் நமக்கு பாவ மன்னிப்பு நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் நல்கியதால் நாம் இயேசுவின் நீதியுள்ள சீடர்கள் ஆனோம். உண்மை பாவமன்னிப்பு நற்செய்தியைப் போதிப்பதற்கு இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவினார்.

சீடர்களுக்கும் நமக்கும், உலகின் எல்லாப் பாவங்களும் நம் வாழ்நாள் முழுவதும் செய்யும் அனைத்துப் பாவங்களும், அவர் ஞானஸ்நானம் பெற்றதாலும் சிலுவையில் மரித்ததாலும் முற்றிலுமாக கழுவப்பட்டது என்று போதிக்கும்படியாக இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவினார். அவரின் அன்பிற்காகவும் நற்செய்தியான பாமன்னிப்பிற்காகவும் இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறோம்.

சீடர்களின் கால்களைக் கழுவியதன் மூலம் இயேசு நமக்கு இரண்டு காரியங்களைப் போதித்தார். முதலாவது நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது அறியாய், இனிமேல் அறிவாய்என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இப்படிக் கூறியதன் மூலம், இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய நற்செய்தியாகிய பாவ மன்னிப்பின் மூலம் நம் பாவங்களெல்லாம் கழுவப்பட்டன என்று போதித்தார்.

பாவிகளை இரட்சித்து அவர்களை நீதிமானாக்குவதற்கு இயேசு தம்மைத் தாழ்த்தியது போல், மறுபடியும் பிறந்தவர்களான நாம் மற்றவர்களுக்கு பாவமன்னிப்பு நற்செய்தியை பிரசங்கித்து ஊழியஞ் செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்கு போதித்தார்.

பஸ்கா பண்டிகை நாளின் பந்தியில் இயேசு சீடர்களின் கால்களைக் கழுவியதற்கான இரண்டு காரணங்களும் தெளிவாக இருக்கின்றன. அது இன்னும் கூட ஆலயத்தில் இருக்கிறது.

   ஒரு சீடனால் தன் ஆசிரியரை விட உயர்ந்தவனாக இருக்க முடியாது. ஆகவே, நாம் இயேசுவிற்கே பணிவிடை செய்வது போல் உலகிற்கு நற்செய்தியைப் போதிக்கிறோம். மேலும் முதலில் இரட்சிக்கப் பட்டவர்களான நாம் நமக்கு பின் வருபவர்களுக்கு ஊழியஞ் செய்யவேண்டும். இதனைக் கற்று கொடுப்பதற்கே இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவினார். அது தவிர, பேதுருவின் கால்களைக் கழுவியதன் மூலம் அவரே சரியான இரட்சகர் என்று நமக்கு காட்டினார். ஆகவே நாம் எப்பொழுதும் சாத்தானால் வஞ்சிக்கப்படுவதில்லை.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியான பாவ மன்னிப்பை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப் படலாம். இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும், சிலுவை மரணத்தினாலும், உயிரோடெழுந்ததாலும் நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். அவருடைய இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே இவ்வுலகின் பாவங்களிலிருந்து நிரந்தரமாக இரட்சிக்கப்படமுடியும்.

நம்முடைய அன்றாடப் பாவங்களைக் கழுவிய நற்செய்தியின் மீதுள்ள விசுவாசம்

நீர் மற்றும் ஆவியான பாவ மன்னிப்பு நற்செய்தியை விசுவாசிப்பதன் மூலம் சாத்தானின் வஞ்சனைகளை வெட்டிப்போடலாம். மக்கள் இலகுவாக பிசாசினால் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும் சாத்தான் நம் காதுகளில் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறான். மனிதர்களின் மாமிசம் இவ்வுலகில் பாவம் செய்யும் என்பதை தெரிந்து கொண்டாலும், அவர்களால் பாவமின்றி எப்படி இருக்க முடியும்? எல்லா மக்களும் பாவிகளே.

நமக்கு பதில் தெரியும். அவரின் ஞானஸ்நானம் மூலம் நம் மாமிசத்தின் அனைத்துப் பாவங்களையும் இயேசு எடுத்துப் போட்டார் என்பதை நாம் அறிந்த பிறகும், விசுவாசி ஒருவனால் எப்படி பாவத்துடன் இருக்க முடியும்?” இயேசு எல்லாப் பாவங்களுக்குமான கூலியை முழுவதுமாக கொடுத்துவிட்டபடியால் நாம் செலுத்துவதற்கு எந்த பாவம் மிச்சமிருக்கிறது.

நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிக்காவிட்டால், சாத்தானின் வார்த்தைகள் சரியானவைகளாகத் தோன்றும். ஆனால் நற்செய்தி நம் பக்கத்திலிருக்கும் போது, வேதவாக்கின் சத்தியத்தின் மீது அலைபாயாத விசுவாசத்துடனிருக்க முடியும்.

ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் மறுபடியும் பிறப்பதன் மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நான நற்செய்தி, அவரின் சிலுவை இரத்தம், அவரின் மரணம் மற்றும் உயிரோடெழும்பியது ஆகிய நற்செய்தியை விசுவாசிப்பது உண்மை நம்பிக்கையாகும்.

பரிசுத்த ஆசரிப்புக் கூடார மாதிரியின் படத்தை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? அது ஒரு சிறிய வீடு. இந்த வீடு இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டது. வெளிப் பாகம் பரிசுத்த ஸ்தலமாகவும், உள் பாகம் கிருபாசனத்தைக் கொண்டுள்ள மகாபரிசுத்த ஸ்தலமாகும்.

அங்கு மொத்தமாக 60தூன்கள் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்திலும், பரிசுத்த ஸ்தலத்தில் 48பலகைகளும் உள்ளன. கர்த்தருடைய வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் படத்தை நம் மனதில் கொள்ளவேண்டும்.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் எதனால் செய்யப்பட்டது?

  • பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் எதனால் செய்யப்பட்டது?
  • இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்பட்ட தொங்குதிரை இருந்தது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலைக் குறித்து யாத்திராகமம் 27:16 இல் விவரிக்கப்பட்டுள்ளது, பிரகாரத்தின் வாசலுக்கு இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் சித்திரத் தையல் வேலையாய்ச் செய்யப் பட்ட இருபது முழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நாலு தூண்களும், அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.

ஆசரிப்புக்கூடார வாசலில் உபயோகப்படுத்திய பொருட்கள் இளநீலம், இரத்தாம்பரம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களினாலான நூலும், மெல்லிய பஞ்சு நூலுமாகும். அது சித்திரத்தையல் வேலையாய் செய்யப்பட்ட அதிக நிறங்களைக் கொண்டதாக இருந்தது.

வாசலை அனைவரும் இலகுவாக அறிந்து கொள்ளும்படி கர்த்தர் மோசேயை இளநீலம், இரத்தாம்பரம் மற்றும் சிகப்பு நிறத்தினால் வாசலை பல நிறங்களில் நெய்யும்படி கூறினார். ஆகவே வாசலானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு மற்றும் மெல்லிய பஞ்சு நூலாலும் நெய்யப்பட்டு நாலு தூண்களில் தொங்கவிடப்பட்டது, இந்த நான்கு பொருட்களும், கர்த்தருடைய இரட்சிப்பின் திட்டத்தைக் குறிக்கின்றன. அவர் குமாரனையும் ஞானஸ்நானத்தையும், இயேசுவின் இரத்தத்தையும் கர்த்தராகிய தன்னையும் விசுவாசிப்போரை இரட்சிக்கப்போகிறார்.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு உபயோகப்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட அர்த்தம் இருந்தது. அது கர்த்தரின் வார்த்தைகளையும், இயேசுவின் மூலம் மனிதகுலத்தை இரட்சிக்கும் அவர் திட்டத்தையும் குறிக்கின்றது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலில் எத்தனை வகையான பொருட்கள் உபயோகப்படுத்தப் பட்டன? இளநீலம், இரத்தாம்பரம் மற்றும் சிகப்பு ஆகிய நூல்கள் மற்றும் மெல்லிய பஞ்சு நூல். நற்செய்தியாகிய மறுபடியும் பிறப்பதன் மீதுள்ள நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த உதவும் இவை நான்கும் மிகவும் முக்கியமானதாகும். இது முக்கியமில்லாதது என்றால், இந்த விவரங்கள் வேதாகமத்தில் இத்தனை விரிவாக எழுதப்பட்டிருக்காது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலில் உபயோகப்படுத்திய பொருட்களும் வெளிப்பிரகாரத்தின் பொருட்களும் இரட்சிப்பின் முக்கியமான பகுதிகளாகுவதாலும் இவை நம் எல்லா அன்றாடப் பாவங்களையும், மூலப் பாவத்தையும், எதிர்காலப் பாவங்களையும் கழுவியதால் அவை இளநீலம், இரத்தாம்பரம் சிகப்பு ஆகிய நிற நூல்களாலும் மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்படவேண்டியதாகியது. ஆகவே, கர்த்தர் இவற்றைப் பற்றி மேசேயிடம் வெளிப்படுத்தி அவர் கூறிய படியே அதனைச் செய்யும் படி கூறினார்.

கர்த்தரின் நற்செய்தியில் இளநீல நூல், இரத்தாம்பரநூல் மற்றும் சிவப்பு நூல் ஆகியவற்றின் பொருள் என்ன?

  • ஆசரிப்புக் கூடாரத்தின் அனைத்துப் பொருட்களும் எதனைக்  குறிக்கின்றன?
  • இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர் அளிக்கும் இரட்சிப்பு.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் தொங்கிய திரைச் சீலையும் இளநீலம், இரத்தாம்பரம் சிகப்பு ஆகிய நிற நூல்களினாலும் மெல்லிய பஞ்சு நூலினாலும் ஆனதாயிருந்தது. பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் ஆராதனை ஏறெடுத்த தலைமை ஆசாரியன் அணிந்த அங்கி மேற்கண்ட அதே பொருட்களினால் ஆனது.

இளநீல நூல் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. 1 பேதுரு 3:21 இல் அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது.என்று கூறப்பட்டுள்ளது. இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டதை பாவ நிவாரண இரட்சிப்பிற்கு ஒப்பானது என்ற இவ்வசனத்தின் மூலம் பேதுரு உறுதி செய்கிறான். அவரின் ஞானஸ்நானத்தின் போது நம்முடைய எல்லாப் பாவங்களும் உலகின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. ஆகவே இயேசுவின் ஞானஸ்நானமான இளநீல நூலானது இரட்சிப்பின் வார்த்தையின் மிக அத்தியாவசியமான பகுதியாகும்.

சிகப்பு நிறமானது இயேசுவின் இரத்தத்தையும், இரத்தாம்பர நூலானது இராஜரீகத்தையும் - இயேசுவின் அரசரும் கர்த்தரும் ஆகிய நிலையையும் குறிப்பிடுகிறது. ஆகவே, இம்மூன்று நூல்களின் நிறங்களும் இயேசுவின் மீது அவர் இரட்சிப்பின் மீதுள்ள நம்பிக்கைக்கு அவசியமானதாகும்.

தலைமை ஆசாரியன் பகட்டாக அணிந்த ஆடை ஏபோது என்றழைக்கப்படுகிறது. ஏபோது அங்கியின் நிறமும் நீலமாகும். தலைமை ஆசாரியன் ஒரு தலைப் பாகையை அணிந்தான். அதில் சுத்தத் தங்கமான ஒரு தகட்டில் கர்த்தருக்குப் பரிசுத்தம்' என்று வெட்டப்பட்ட எழுத்துக்கள் இருந்தன. இந்தப் பட்டமானது தலைப் பாகையில் ஒரு நீல கயிறினால் இணைக்கப்பட்டிருந்தது.

இளநீல நூல் குறிப்பிட்ட உண்மை

  • இளநீல நூல் எதனைக் குறிக்கிறது?
    • இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.

இளநீல நூலின் பொருள் என்னவென்று வேதாகமத்தில் நோக்கினேன். நீலத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? இளநீல, இரத்தாம்பர, சிகப்பு ஆகிய நூல்களில் இளநீல நூலினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இளநீல நூலானது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளும் விதமாக இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். ( மத்தேயு 3:15 )

அவரின் ஞானஸ்நானம் மூலம் இயேசு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டிராவிட்டால், விசுவாசிகளாகிய நம்மால், கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாயிருக்க முடியாது. ஆகவே, இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்க்கும்படியாக யோவான் ஸ்நானனால் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார்.

பரிசுத்த ஆசாரிப்புக்கூடார பிரகாரத்தின் வாசலில் இளநீல நூல் இருப்பதற்கான காரணம் இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் நம்மால் பரிசுத்தமாக முடியாது என்பதை உணர்த்தவே.

   சிகப்பு நூலானது இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. இரத்தாம்பரம் என்பது ஆவியாகும், இப்படியாக இயேசுவை அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்.” (1 தீமோத்தேயு 6:15) என்று கூறப்பட்டுள்ளது.

சிகப்பு நூலானது, எல்லா மனிதர்களின் பாவங்களுக்கும் கிரயஞ் செலுத்த சிலுவையில் இரத்தஞ் சிந்திய இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த உலகிற்கு மாமிசமாக வந்து, நற்செய்தியாகிய பாவமன்னிப்பிற்காக சிலுவைக்கு தன்னை பலியிடும் முன் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசுவின் ஞானஸ்நானமானது உண்மையான பாவமன்னிப்பின் நற்செய்தியாகும். இது பழைய ஏற்பாட்டின் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தில் உபயோகிக்கப்பட்ட நூல்களின் நிறத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.

ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்கள் அகேசியா மரத்தினால் செய்யப்பட்டது, பாதங்கள் வெண்கலத்தாலும், இந்த வெண்கல பாதமானது வெள்ளித் தகடுகளினாலும் மூடப்பட்டிருந்தது.

பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால் எல்லாப் பாவிகளும் தம் பாவங்களுக்காக நியாயந் தீர்க்கப் படவேண்டியிருந்தது. கர்த்தரால் மறுபடியும் வாழ்வதற்கு ஆசீர்வதிக்கப்படும் முன், அவன் தன் பாவங்களுக்காக நியாயந் தீர்க்கப் படவேண்டியிருந்தது.

ஆயினும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்த ஆசரிப்புக்கூடார இளநீல நூலினால் குறிப்பிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமானது நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தது. அவற்றிற்காக நியாயந்தீர்க்கப்படவும் இரத்தஞ்சிந்தவும் நம் பாவங்களை அவர் சிலுவைக்கு எடுத்துச் சென்றார். அப்படி செய்ததால் விசுவாசமிக்க மக்களான நம்மை நற்செய்தியாகிய பாவ மன்னிப்பினால் இரட்சித்தார். அவர் ராஜாதி ராஜாவும் பரிசுத்த தேவனுமானவர்.

அன்பானவர்களே, நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு நம்மை இரட்சித்த இயேசு அளிக்கும் இரட்சிப்பானது அவரின் ஞானஸ்நானமாகும். கர்த்தராகிய இயேசு, இவ்வுலகிற்கு மாமிசமாக இறங்கி வந்தார்; இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளும் படியாக ஞானஸ்நானம் பெற்றார்; நமக்காக நியாயத் தீர்ப்பை ஏற்க அவர் சிலுவையில் அறையப்பட்டு சிலுவையில் இரத்தம் சிந்தினார். இயேசுவின் ஞானஸ்நானம் அவர் நம் எல்லா மனிதர்களுக்குமான உண்மை இரட்சகரானார் என்று சிறிதளவு சந்தேகத்தின் நிழலுமின்றி கூறுகிறது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உபயோகித்த நிறங்களில் அதனை நாம் காணலாம். மெல்லிய பஞ்சு நூலின் உபயோகம் என்பது உலகின் எல்லாப் பாவங்களிலிமிருந்து யாரையும் விட்டு விடாது எல்லோரையும் இரட்சித்தார் என்று பொருள் படுகிறது.

இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் ஆன நூல் ஆகியவற்றால் வாசலின் தொங்கு சீலை நெய்யப்பட வேண்டுமென்பது கர்த்தரின் இரட்சிப்பின் உண்மையைக் குறித்து தெளிவாக நமக்கு கூறுகிறது. நம் இரட்சிப்பிற்கான பாவ நிவாரணத்திற்கு இது மிகவும் அவசியமானது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உபயோகப்படுத்திய பொருள்களிலிருந்து, இயேசுகிறிஸ்து சரியான திட்டம் வகுக்காமல் ஏனோதானோவென்று பாவிகளை இரட்சிக்கவில்லை என்பதை நாம் காணலாம். மனிதகுலத்தின் இரட்சிப்பை நிறைவேற்றுவதற்காக, அவர் கர்த்தருடைய கவனமாக செய்யப்பட்ட திட்டத்தை பின்பற்றி, ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிரோடெழுந்தார். இளநீல இரத்தாம்பர மற்றும் சிகப்பு நூல்களாகிய நற்செய்தியாகிய பாவமன்னிப்பின் பொருள்களினால் அவரின் இரட்சிப்பை விசுவாசிக்கும் எல்லோரையும் இயேசு இரட்சித்தார்.

பழைய ஏற்பாட்டின் வெண்கலப் பாத்திரமானது புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்தின் நிழலாயிருக்கிறது

  • பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லுமுன் ஆசாரியர்கள் ஏன் தம் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும்?
  • அவர்கள் கர்த்தருக்கு  முன் பாவங்களின்றி நிற்க வேண்டியிருந்தால்.

பாத்திரமும் வெண்கலத்தினால் செய்யப் பட்டிருந்தது. வெண்கலம் இயேசு நமக்காகப் பட்ட பாடுகளைக் குறிக்கின்றது. நீர் வைத்திருந்த பாத்திரம் நற்செய்தியின் வார்த்தைகளுக்கு ஒப்பானதாகவும் நம் அக்கிரமங்கள் யாவும் கழுவப்பட்டுவிட்டன என்றும் நமக்குத் கூறுகிறது.

அது நம்முடைய அன்றாடப் பாவங்கள் எப்படிக் கழுவப்பட்டன என்று நமக்கு காட்டுகிறது. இயேசுவின் ஞானஸ்நான வார்த்தைகளின் மூலம் மனிதகுலத்தின் அன்றாடப் பாவங்கள் கழுவப்படலாம் என்ற உண்மையின் நிழலாயிருக்கிறது.

தகன பலி பீடம் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. நீல நிறமான இயேசுவின் நீரானது பாவ மன்னிப்பின் நற்செய்தியாகிய யோவான் ஸ்நானன் இயேசுவுக்களித்த ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. (மத்தேயு 3:15, 1 யோவான் 5:5-10). அது பாவமன்னிப்பின் மூலமான இரட்சிப்பின் நற்செய்திக்கான சாட்சியின் வார்த்தையாகும்.

1 யோவான் 5 இல் எழுதப்பட்டுள்ளது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறதுஅவன் மேலும் நம்மிடம் கூறுகிறான். யார் தேவகுமாரனை விசுவாசிக்கிறானோ அவனுக்கு நீர், இரத்தம் மற்றும் ஆவியாகியவை சாட்சியிருக்கின்றன.

கர்த்தர் நம்மை பாவ நிவிர்த்தி நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படவும் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் செல்லவும் அனுமதித்தார். ஆகவே, இப்போது நம்மால் விசுவாசத்தில் வாழமுடிகிறது. கர்த்தரின் வார்த்தைகளினுள் பசியார முடிகிறது. நீதியின் வாழ்க்கை ஒன்றையும் வாழ முடிகிறது. கர்த்தரின் மக்களாவது என்பதன் பொருள் பாவநிவிர்த்தி நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் வாழ்வதென்பதாகும்.

பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலுள்ள இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நூல் ஆகியவற்றின் பொருளைக் குறித்து சிந்திக்காது வெறுமனே விசுவாசிப்பது போதுமென்று அநேக மக்கள் இன்று எண்ணுகின்றனர். இக்காரியங்களைக் குறித்து தெரியாமல் இயேசுவை ஒருவன் விசுவாசித்தால் அவன் விசுவாசம் உண்மையாக இராது. ஏனெனில் அவனிருதயத்தில் இன்னமும் பாவமிருக்கும். ஒருவனின் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கும் ஏனெனில் அவன் நீர், இரத்தம், ஆவி, ஆகிய பாவ நிவிர்த்தியின் நற்செய்தியின் மூலம் மறுபடியும் பிறக்கும் உண்மையை விசுவாசிக்கவில்லை.

ஒருவனிடம் அவனுக்குத் தெரியாத ஒருவனை மதிப்பிடக் கூறினால், அவன் கேட்பவனை மகிழ்விக்க கூறுவான். ஆம், நான் இந்த நபரை நம்புகிறேன். நான் அவனை சந்தித்ததில்லை தான். ஆனாலும் அவனை விசுவாசிக்கிறேன்.இதனைக் கேட்கும்போது கேட்பவன் மகிழ்வான் என்று எண்ணுகிறீர்களா? உங்களில் சிலர் அப்படி இருக்கலாம், ஆனால் இத்தகைய நம்பிக்கையை கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கவில்லை.

கர்த்தர் நம்மை, பாவ மன்னிப்பு நற்செய்தியாகிய இயேசுவின் இரட்சிப்பாகிய நீல நிறத்தின் மூலமும் (ஞானஸ்நானம்) இரத்தாம்பரத்தாலும் (இராஜரீகம்), மற்றும் சிவப்பாலும் (இரத்தம்) விசுவாசிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். அவரின் மீது விசுவாசம் வைக்கும் முன்பே, இயேசு நம்மை எப்படி எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்பதை தெரிந்திருக்கவேண்டும்.

நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது அவர் நம்மை நம் பாவங்களிலிருந்து எப்படி நீரின் மூலமாக (இயேசுவின் ஞானஸ்நானம்) இரத்தம் (அவரின் மரணம்) மற்றும் ஆவியின் மூலமாக (கர்த்தராகிய இயேசு) இரட்சித்தார் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

நாம் உண்மையாக இவற்றைப் புரிந்து கொள்ளும்போது நாம் உண்மையான விசுவாசத்தை அனுபவிப்பதோடு முழு நம்பிக்கையினால் கட்டுண்டவர் ஆவோம். இந்த உண்மை தெரியாமல் நம் விசுவாசம் முழுமையாகாது. உண்மையான விசுவாசம் இயேசுவின் இரட்சிப்பின் சாட்சியை, பாவ மன்னிப்பு நற்செய்தியை, இயேசுவே மனிதர்களின் உண்மை இரட்சகர் என்பதை நாம் புரிந்து கொள்வதில் இருக்கிறது.

இயேசுவை பரியாசம் செய்யும் விசுவாசம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? அதனைப் பார்ப்போமாக.

இயேசுவை பரியாசம் பண்ணும் நம்பிக்கை

  • விசுவாசத்திற்கு அதிகம் தேவயானது எது?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த துல்லியமான அறிவு.

இயேசுவை வெறுமனே ஏனோதானோவென்று விசுவாசிப்பது அவரைப் பரியாசம் செய்வதாகும். அவரை விசுவாசிப்பது கடினமாயிருக்கிறது, ஆனால் ஒரே கர்த்தரும் தேவகுமாரனாகவும் இருப்பதால் நான் விசுவாசித்தேயாக வேண்டும்என்று நினைத்தால் நீ இயேசுவைப் பரியாசம் பண்ணுகிறாய். பாவ நிவிர்த்தியின் நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கவேண்டும்.

பாவநிவிர்த்தியின் நற்செய்தியைப் பற்றி தெரியாமலேயே இயேசுவை விசுவாசிப்பது இயேசுவை மொத்தமாக விசுவாசிக்காததிலும் மோசமானதாகும். இயேசுவின் இரத்தத்தை ஒருவன் விசுவாசித்து நற்செய்தியைப் பிரசங்கிப்பது, உண்மைத் தெரியாமல் செய்யும் வீண் வேலையாகும்.

இயேசுவை ஏனோதானோவென்று விசுவாசிக்கும் படி யாரும் பொய் பிரசங்கம் செய்வதையும், எந்த காரணமுமின்றி அவர் மீது விசுவாசம் வைப்பதையும் அவர் விரும்பவில்லை. பாவ நிவிர்த்தி நற்செய்தியை நாம் அறிவதன் மூலம் தம்மை விசுவாசிக்க வேண்டுமென இயேசு விரும்புகிறார்.

இயேசுவை நாம் விசுவாசிக்கும்போது, பாவ மன்னிப்பின் நற்செய்தியானது ஞானஸ்நானமும், இயேசுவின் இரத்தமும் என்று நாம் அறிந்திருக்கிறோம். இயேசுவை நாம் விசுவாசிக்கும்போது, அவரின் வார்த்தைகளின் மூலம் பாவமன்னிப்பின் நற்செய்தியை நாம் புரிந்து கொள்வதுடன், அவர் நம் எல்லாப் பாவங்களையும் எவ்வாறு கழுவினார் என்றும் குறிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.

பரிசுத்த ஆசரிப்புக் கூடார வாசலில் இளநீலநூலும், இரத்தாம்பர நூலும், சிகப்பு நூலும் எதைக் குறிக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது நித்தியமாக இருக்கும் உண்மை நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

இளநீலம், இரத்தாம்பரம் மற்றும் சிகப்பு ஆகிய நூல்களின் முக்கியப் பொருளாகிய இயேசுவை விசுவாசிக்காமல் நம்மால் மறுபடியும் பிறக்க முடியாது

  • பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கு முன் ஆசாரியர் செய்வதென்ன?
  • வெண்கல குவளையிலுள்ள நீரினால் தம் கைகளையும் கால்களையும் கழுவினர்.

நம் தேவனாகிய இயேசு நம்மை இரட்சித்தார். அவர் எத்தனை சிறப்பாக நம்மை இரட்சித்தார் என்பதைக் காணும்போது அவரைப் புகழாமல் இருக்க முடியாது. நாம் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நோக்க வேண்டும். அவர் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல, இரத்தாம்பர, சிகப்பு நூல்களான பாவ நிவாரண நற்செய்தியின் வார்த்தைகளை நமக்கு கொடுத்து அவற்றால் நம்மை இரட்சித்தார். நாம் கர்த்தருக்கு நன்றி கூறி அவரைப் புகழுவோமாக.

பயங்கரமான ஆக்கினைக்குள்ளாகாது பாவிகளால் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போக முடியாது அவனின் பாவங்களுக்கு தீர்க்கப்படாமல் அவனால் எப்படி பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியும்? இதற்கு சாத்தியமே இல்லை. அத்தகைய ஒருவன் நுழைந்தால் அங்கேயே அப்போதே கொல்லப்படுவான். அது ஆசீர்வாதமாய் இல்லாமல் அழிவாயிருக்கும். ஒரு பாவியால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதோ, வாழலாம் என்று நினைப்பதோ முடியாது.

பரிசுத்த ஆசரிப்புக் கூடார வாசலில் மறைந்துள்ள இரகசியத்தின் மூலம் நம் தேவன் நம்மை இரட்சித்தார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நிற நூல்களும், மெல்லிய பஞ்சு நூலினாலும், அவர் நம்மை இரட்சித்தார். அவரின் இரட்சிப்பின் இரகசியத்தை இவற்றின் மூலம் நம்மிடம் கூறினார்.

நீயும் நானும் அவ்வழியில் இரட்சிக்கப்பட்டோமா? நாம் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நூல்கள் ஆகியவற்றின் வார்த்தைகளை விசுவாசிக்கவில்லை என்றால், பாவமன்னிப்பு நற்செய்தியின் மூலம் இரட்சிக்கப் படுவதற்கான வாய்ப்புகளில்லை. இளநீல நிறம் கர்த்தரைக் குறிக்கவில்லை. அது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. அது நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்ட இயேசுவின் ஞானஸ்நானம் என்று பொருள் படுகிறது.

இளநீல நூலை விசுவாசிக்காமல் ஒருவனால் தகன பலி பீடம் வரை செல்லமுடியும். ஆயினும் கர்த்தரிருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அவனால் நுழைய முடியாது.

ஆகவே, நாம் பரிசுத்த ஆசரிப்புக்கூடார வாசலுக்குள் செல்லுமுன், இளநீல நூல் (இயேசுவின் ஞானஸ்நானம்), சிகப்பு நூல் (அவரின் சிலுவை இரத்தம்), இரத்தாம்பரம் (கர்த்தராகிய இயேசு, தேவகுமாரன்) ஆகியவற்றை விசுவாசிக்கவேண்டும். நாமிதனை விசுவாசிக்கும் போது மட்டுமே கர்த்தரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மகா பரிசுத்த திரைச்சீலை வழியாக பிரவேசிக்க அனுமதிக்கப் படுவோம்.

ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்தில் நுழைந்து, தாம் உள்ளே இருப்பதாக சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அது இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்பட எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நம்மால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியவேண்டும்.

மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைவதற்கு, வெண்கலப் பாத்திரத்தை நாம் கடக்க வேண்டும். வெண்கலப் பாத்திரம் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. மேலும் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லா தினப் பாவங்களையும் கழுவுவதால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு ஏற்ப நாம் பரிசுத்தமடைகிறோம்.

பழைய ஏற்பாட்டில், ஆசாரியர்கள் உள்ளே நுழைவதற்கு முன் தம்மைக் கழுவிக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் புதிய ஏற்பாட்டில், அவர்களின் வாழ்வு முழுவதுமான மீறுதல்கள் கழுவப்பட்டன என்று குறிக்கும் விதத்தில் இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவினார்.

கர்த்தரின் சட்டம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23). கர்த்தர் மனிதனின் பாவங்களைத் தண்டிக்கிறார். ஆனால் அவனுக்கு பதிலாக அப்பாவங்களை தம் குமாரனின் மீது சுமத்தி அவரை நியாயந்தீர்த்தார். இதுவே கர்த்தரின் அன்பும், அவரின் இரட்சிப்புமாயிருக்கிறது. உண்மயான இரட்சிப்பை நாம் இயேசுவின் ஞானஸ்நானம், இரத்தம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கும் போது மட்டுமே நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.

மறுபடியும் பிறக்கவேண்டுமானால், பாவமன்னிப்பு நற்செய்தியாகிய எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை ஒருவன் இகழக்கூடாது

  • நாம் செய்வதற்காக விடப்பட்ட ஒரே காரியம் என்ன?
    • கர்த்தரால் எழுதப்பட்ட  வார்த்தைகளை விசுவாசிப்பது

நான் மற்ற மக்களை இகழுவதில்லை. எனக்கு தெரியாத ஒன்றைக் குறித்து யாராவது என்னிடம் பேசினால், அதனைப் போதிக்கும்படி நான் கேட்பேன். ஆனால் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் பொருளை சுற்றியுள்ளவர்களிடம் கேட்டாலும், ஒருவராலும் அதனைக் கூறமுடியவில்லை.

   அப்படியானால் என்னால் என்ன செய்ய முடியும்? நான் வேதாகமத்திற்கு திரும்பவேண்டும். பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து வேதாகமத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது. யாத்திராகமத்தில் விபரமாக விளக்கப் பட்டுள்ளது. இந்நூலை ஒருவன் கவனமாக வாசித்தால் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளின் மூலம் அதன் பொருளை அவன் புரிந்து கொள்ளலாம்.

அன்பு நண்பர்களே, நீங்கள் இயேசுவை குருட்டுத்தனமாக விசுவாசிப்பதால் இரட்சிக்கப்பட முடியாது. ஆலயத்திற்கு ஒழுங்காக செல்வதால் மறுபடியும் பிறக்க முடியாது. நிக்கோதேமுவிற்கு இயேசு என்ன கூறினார் என்று நமக்குத் தெரியும். நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.

இயேசுவை விசுவாசிக்கும் யாவரும் இளநீல நூலையும் (இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் பாவங்களெல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது), சிகப்பு நூலையும் (நம் பாவங்களுக்கான இயேசுவின் மரணம்), இரத்தாம்பர நூலையும் (இயேசுவே இரட்சகர், கர்த்தர், மற்றும் தேவ குமாரன்) விசுவாசிக்க வேண்டும்.

உலகின் அனைத்துப் பாவிகளின் இரட்சகர் இயேசுவே என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசம் இல்லாமல் ஒருவனால் மறுபடியும் பிறக்கவோ பரிசுத்த ஸ்தலமான பரலோக இராஜ்யத்தினுள் பிரவேசிப்பதோ முடியாது. அது இல்லாமல் ஒருவனால் இவ்வுலகில் விசுவாசத்துடன் வாழக்கூட முடியாது.

இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் மறுபடியும் ஒருவன் பிறப்பது அத்தனை இலகுவானதில்லையா? - ஆம் - நீ இரட்சிக்கப்பட்டாய். நான் இரட்சிக்கப்பட்டேன். நாமெல்லாம் இரட்சிக்கப்பட்டோம்.எத்தனை அருமையானது. ஆனால் மறுபடியும் பிறக்காமலேயே' அநேகர் இயேசுவை விசுவாசிக்கின்றனர்.

ஒருவன் வேதாகமத்திலுள்ள உண்மைகளைத் தெரிந்து கொள்வதுடன் இயேசுவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும். வேதாகமத்தில் உள்ள பாவமன்னிப்பு நற்செய்தியை நாம் அறிவதுடன் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நாம் பிரவேசிக்கவும், விசுவாச உலகினால் கர்த்தருடன் வாழவும் இளநீலம்,இரத்தாம்பரம், மற்றும் சிகப்பு நூல்களின் பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பரலோக இராஜ்யம் செல்லும் நேரம் வரும் வரைக்கும் விசுவாசத்தின் ஆசரிப்புக் கூடாரத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். இயேசுவை சரியான வழியில் எப்படி விசுவாசிப்பது என்று அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

மூல நற்செய்தியானது இளநீல நூலினால் பரிசுத்தமாக்கப்படுகிறது

  • இரட்சிப்பின்  பிரிக்க முடியாத நிபந்தனை என்ன?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

சில நேரங்களில் சிலர் எந்த தவறும் செய்யாமல் நல்விதமாக வாழ முடியும் என்று எண்ணுகின்றனர். அவன் எதையாவது செய்ய முயலும்போது, தன்னுடைய குறைபாடுகளை சீக்கிரமே கண்டு கொள்வான். மனிதர்கள் முழுமையடையாதவர்களாதலால், அவர்களால் பாவம் செய்யாமல் இருக்க முடியாது. ஆயினும், இயேசு நம்மை பாவநிவிர்த்தியின் நற்செய்தியாகிய இளநீல, இரத்தாம்பர, சிகப்பு நூல்களினால் இரட்சித்தமையால், நாம் பரிசுத்தமாக்கப்பட்டு கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும்.

கர்த்தர் நம்மை இளநீல, இரத்தாம்பர, சிகப்பு நூல்களினால் இரட்சிக்கவில்லையெனில், நம்மில் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எப்போதும் நுழைந்திருக்கவே முடியாது. இதற்கான காரணம் என்ன? ஒருவன் சரீரத்தினால் குறைவில்லாது வாழ்ந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்றால் ஒருவர் கூட அதற்கு தகுதி பெற்றிருக்கமாட்டார்கள். நற்செய்தி இல்லாமல் ஒருவன் இயேசுவை விசுவாசிக்கும்போது, அவன் தன்னிருதயத்தில் அதிக பாவங்களைச் சேர்க்கிறான்.

இயேசு நம்மை அவரின் திட்டமிட்ட இரட்சிப்பாகிய இளநீல, இரத்தாம்பர, சிகப்பு நூல்களினாலும், மெல்லிய பஞ்சு நூலினாலுமான இரட்சிப்பினால் இரட்சித்தார். அவர் நம்பாவங்களையெல்லாம் கழுவினார். இதனை விசுவாசிக்கிறாயா? - ஆம் - பாவமன்னிப்பு நற்செய்தியின் சத்தியம் உன் இருதயத்திலிருந்து அதற்கு நீ சாட்சியாக இருக்கிறாயா? - ஆம் -

நீங்கள் நற்செய்தியைக் குறித்து சாட்சி கூறி, உங்கள் நெற்றியில் கர்த்தருக்கே பரிசுத்தம்' என்ற பட்டயத்தை அணியும் போது ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாய்' (1 பேதுரு 2:9 ) இருப்பீர்கள். அப்பொழுது மட்டுமே மக்கள் முன் நின்று, நீங்கள் கர்த்தரின் ஊழியனாக, தலைமை ஆசாரியனாக பணி செய்வதாக கூற முடியும்.

தலைமை ஆசாரியனின் தலைப்பாகையில் இளநீல நூலினால் பிணைக்கப்பட்ட தங்கத்தினாலான பட்டயம் இருந்தது. இளநீலம் ஏன்? இயேசு பாவ மன்னிப்பின் நற்செய்தியின் மூலம் நம்மை இரட்சித்தமையாலும், அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்து போட்டு நம்மை பாவம் இல்லாதவர்கள் ஆக்கியதாலும் இளநீலம் பயன் படுத்தப் பட்டது. (பழைய ஏற்பாட்டில் கைவத்தல், புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம்)

நாம் எத்தனை பக்தியுடன் இயேசுவை விசுவாசித்திருந்தபோதிலும், இரகசிய வார்த்தைகளான இளநீலம், இரத்தாம்பர மற்றும் சிகப்பு நூல்கள் இல்லாமல் கர்த்தருக்கே பரிசுத்தம்' என்று எழுதப்பட்ட பட்டயத்தைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

நாம் எப்படி நீதிமான் ஆனோம். அது மத்தேயு 3:15 இல் எழுதப்பட்டுள்ளது. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டதால் விசுவாசிகளாகிய நாம் நீதிமான்களானோம்.

இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது நம்மிடம் பாவமில்லை என்று எப்படி கூற முடியும்? இயேசுவை நாம் விசுவாசித்தாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்டதை எண்ணி நாம் சத்தமிட்டு அழுதாலும் இவ்வுலகிலுள்ள அனைவரின் கண்ணீரினாலும் நம் அனைத்துப் பாவங்களையும் கழுவ முடியாது. இல்லை, நாம் எத்தனையாக அழுது மனம் வருந்தினாலும் நம் பாவங்கள் நம்முடனேயே இருக்கும்.

கர்த்தருக்கே பரிசுத்தம்' அவர் தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டதாலும், கர்த்தர் இயேசுவின் மீது எல்லாப் பாவங்களையும் சுமத்த அனுமதித்ததாலும், வேதாகமத்தில் இரட்சிப்பின் வார்த்தைகள் எழுதப் பட்டுள்ளதாலும், நாம் எத்தனை பலவீனர்களாக இருந்தாலும், நம் விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களானோம்.

ஆகவே, இப்போது நம்மால் கர்த்தரின் முன் நிற்க முடியும். இப்பொழுது நம்மால் நீதிமானாக வாழ்ந்து, உலகிற்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியும். , நான் இரட்சிக்கப்பட்டேன், நீ இரட்சிக்கப்பட்டாய், நாமனைவரும் இரட்சிக்கப்பட்டோம்.கர்த்தரின் திட்டப்படி நாம் இரட்சிக்கப் பட்டோம்.

பாவ நிவிர்த்தி நற்செய்தியின் வார்த்தைகள் உன்னிருதயத்தில் இல்லாமல், நீ எத்தனை கடினமாக முயன்றாலும் இரட்சிப்பு கிட்டாது. இது ஒரு கொரியாவின் பிரபல ஒருதலை காதல் பாட்டைப் போன்றது. , நான் அவளின் அருகே போகும் போதும் அவளைக் காணும் போதும், காரணமில்லாமல் என்னிருதயம் வேகமாக துடிக்கிறது, நான் காதல் வசப்பட்டிருப்பேன். என்னுடைய இருதயம் தான் வேகமாக துடிக்கிறது, அவளுடையது அல்ல. ஆனால் என்னுடைய அன்பு திரும்பி வரவில்லை.

வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாக இரட்சிப்பு வருகிறது என்று மக்கள் எண்ண விழைகின்றனர். அவர்கள் கேட்கின்றனர். அது ஏன் ஞானஸ்நான நற்செய்தியினால் மட்டும் வரவேண்டும்?” இயேசுவின் ஞானஸ்நான நற்செய்தி மூலம் அது வரவில்லை எனறால், அது முழு இரட்சிப்பு அல்ல. அது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக சுத்தமாக்கியதால் நாம் நீதிமான்களாக கர்த்தர் முன்பு நிற்க இதுவே ஒரே வழி.

இயேசு நமக்களித்த இளநீல நூலின் இரட்சிப்பு யாது?

  • நம்மை நீதிமானாக்கியது எது?
  • நற்செய்தியாகிய இளநீலம், இரத்தாம்பர, சிகப்பு நிற நூல்கள்.

நற்செய்தியாகிய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நிற நூல்களின் இரட்சிப்பானது, மனிதகுலத்திற்கு கர்த்தர் அளித்த பரிசாகும். இந்த அருளானது நாம் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் சென்று சமாதானமாக வாழ நம்மை ஏதுவாக்கியது. அது நம்மை நீதிமனாக்கியதுடன் ஆலயத்தில் வாழ நம்மை ஏதுவாக்கி, ஆலயத்தினுள் பரிசுத்த வார்த்தைகளினால் பயிற்சி பெற செய்தது.

எப்பொழுதெல்லாம் கர்த்தர் முன்பு ஜெபம் செய்யப் போகிறோமோ, அப்பொழுது கர்த்தர் தம் அன்பினால் நம்மை ஆசீர்வதிக்கிறார். இதனாலேயே நமக்கு இரட்சிப்பானது இத்தனை விலையேறப்பட்டதாக இருக்கிறது. கற்பாறையின் மேல்' வீடுகட்டும் படி கர்த்தர் நம்மிடம் கூறினார். அக்கற்பாறையானது இயேசுவின் ஞானஸ்நானமாயிருக்கிறது. நாமெல்லாம் இரட்சிக்கப் பட்டு, பரலோகம் சென்று, நித்திய ஜீவனைப் பெற்று, கர்த்தரின் பிள்ளைகளாவோமாக.

அன்பு நண்பர்களே, பாவநிவிர்த்தியின் நற்செய்தியினால், நம்மால் விசுவாசத்துடன் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. நம்முடைய பாவங்களெல்லாம் கழுவப்பட்டதாலும் (இயேசுவின் ஞானஸ்நானம்) சிலுவையில் தீர்க்கப் பட்டதாலும், இயேசுவின் ஞானஸ்நான நற்செய்தியில் விசுவாசம் வைப்பதாலும் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

அளவில்லாத பாவ நிவிர்த்தியாகிய ஞானஸ்நானமும் இயேசுவின் இரத்தமுமே நம் எல்லாப் பாவங்களையும் கழுவிய நற்செய்தியாகும். இதனை விசுவாசிக்கிறாயா? உண்மையான நற்செய்தியானது நம் எல்லாப் பாவங்களையும் கழுவிய பரலோகத்தின் பாவநிவிர்த்தியின் நற்செய்தியாகும்.

நற்செய்தியான பாவ நிவிர்த்தியை விசுவாசிப்பதால் நாம் மறுபடியும் பிறந்தோம். இயேசு நமக்கு நற்செய்தியாகிய பாவ மன்னிப்பைக் கொடுத்தார். அது நம் அனைத்து அன்றாடப் பாவங்களையும் கூட கழுவியது. கர்த்தருக்கே புகழ், அல்லேலூயா! கர்த்தருக்கே நன்றிகள்.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே (நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தம்) இயேசுகிறிஸ்து கூறிய உண்மையான நற்செய்தியாகும். இந்நூல் இயேசுவின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியை வெளிப்படுத்த எழுதப்பட்டது.

முழு உண்மையையும் அறியாமல் அநேக மக்கள் இயேசுவை விசுவாசிப்பதால் அவர்கள் கிறிஸ்தவ இறையியலின் இறையியல் தத்துவம் என்று கூறிக்கொள்ளும் உலகில் பணியாற்றுகின்றனர்; சுருக்கமாக அவர்கள் வேதப்புரட்டிலும் குழப்பத்திலும் வாழுகின்றனர். ஆகவே, நாம் திரும்பச் சென்று உண்மை நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். இன்னும் நேரமாகவில்லை.

நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியின் மீது கேள்வி எழுப்புவோர்களுக்காக இரண்டாம் நூலில் மேலும் விபரங்களைத் தருவேன். *